கன்றாவி.. எழில் படமா இது.. திருச்சி சாதனா எடுத்த படம் மாதிரி இருக்கு.. தேசிங்கு ராஜா 2.. ரசிகர்கள் கோபம்!

சென்னை: துள்ளுவதோ இளமை, ராஜா, தேசிங்குராஜா உள்ளிட்ட பல படங்களை எடுத்த இயக்குநர் எழில் இயக்கத்தில் விமல், பூஜிதா பொன்னடா, புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான தேசிங்குராஜா 2 படத்தை பார்த்த ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். கங்குவா படத்தை பார்த்துவிட்டு பலரும் கடுப்பில் திட்டிய நிலையில், பப்ளிக் விமர்சனத்துக்கு தடை போடுவதாக தியேட்டர் ஓனர்கள் அறிவித்தனர்.

ஆனால், மதகஜராஜா, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவே மக்களின் விமர்சனம் இருந்த நிலையில், மீண்டும் திரையரங்குகளில் யூடியூபர்களையும் மீடியாவையும் மைக்க நீட்ட அனுமதித்தனர்.

Fans got angered over Vemal s Desinguraja 2 and roast the movie in public review
Photo Credit:

கடந்த வாரம் வெளியான 3 பிஹெச்கே, பறந்து போ உள்ளிட்ட படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்த மக்கள் இன்று வெளியான படங்களுக்கு அதிகளவில் நெகட்டிவ் விமர்சனங்களையே கூறி வருகின்றனர். அதிலும், விமல் நடித்த தேசிங்குராஜா படத்தை பார்த்துவிட்டு தலைவலி வந்து விட்டதாகவும் டைம் வேஸ்ட், மணி வேஸ்ட் என ரசிகை ஒருவர் புலம்பித் தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது.

காமெடியே இல்லை: குக் வித் கோமாளி பிரபலமான புகழ் லேடி போலீஸ் கெட்டப்பில் எல்லாம் நடித்திருக்கிறாரே, தேசிங்குராஜா படத்தில் சூரி பண்ணது போல படம் காமெடியாக இருக்கும் என அந்த டைட்டிலை பார்த்து ஏமாந்து போன ரசிகர்களுக்கு தலைவலியை கொடுத்து அனுப்பியது தான் மிச்சம் என பாதி படத்திலேயே உட்கார முடியாமல் விழுந்தடித்து ரசிகர்கள் பலரும் வெளியேறி சென்று விட்டதாக கூறுகின்றனர்.

திருச்சி சாதனா டைரக்ட் பண்ண மாதிரி இருக்கு: பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எழில் இயக்கியது போலவே இல்லை என்றும் திருச்சி சாதானா டைரக்ட் பண்ண படம் போல இருக்கு என்றும் ரசிகை ஒருவர் ஒட்டுமொத்த கோபத்தையும் இறக்கி விட்டார். இந்த படம் பார்க்கப் போறீங்கன்னா தைலம் மற்றும் ஒரு ஃபிளாஸ்கில் காபி எடுத்துச் செல்லுங்க, புகழ் படத்தில் விமல் சைடு ரோலில் நடித்திருக்கிறார். கொஞ்சம் கூட படமாகவே இல்லை என கழுவி ஊற்றியுள்ளார். பழைய இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் எல்லாம் அவுட்டேட்டட் ஆகிவிட்டதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வரும் நிலையில், எழில் இயக்கிய படமா இது? காரித்துப்பலாம் போல இருக்கு என ரசிகர்கள் கொந்தளித்து வருவதை பார்த்தாலே அதிர்ச்சியாக உள்ளது.

ரொம்ப வொர்ஸ்ட்: லேடி போலீசாக நடித்துள்ள புகழையும் மோசமான ஆங்கிளில் காண்பித்து, பல ஆபாச வசனங்களை வைத்து இதை ஒரு காமெடி படம் என நம்ப வைக்க படக்குழு முயற்சித்தது எல்லாமே தோல்வியில் முடிந்திருக்கிறது என்றும் ரொம்ப வொர்ஸ்ட், கண்டிப்பாக இந்த படம் போட்ட தியேட்டர் பக்கமே போயிடாதீங்க என ஒவ்வொரு ரசிகரும் மைக் கிடைத்ததும் தேசிங்குராஜா 2 படத்தை டோட்டல் டேமேஜ் செய்து வருகின்றனர். மீண்டும் பப்ளிக் விமர்சனங்களை திரையரங்க உரிமையாளர்கள் தடை செய்யும் சூழலே உருவாகும் என தெரிகிறது. நம்ம வனிதா அக்கா, விஷ்ணு விஷால் தம்பி நடித்த படங்களே இந்த படத்திற்கு எவ்வளவோ பரவாயில்லை என்கின்றனர்.

போட்டி போட்டு காமெடி: ஒரு சில ரசிகர்கள் படம் ஓகே ரகம் தான் என்றும் விமலும் புகழும் போட்டிப் போட்டு காமெடி பண்ணியிருக்காங்க என நியூட்ரலான விமர்சனங்களையும் கொடுத்துள்ளனர். ஆனால், அதிகப்படியான ரசிகர்கள் தங்களுக்கு இந்த படம் எதிர்பார்த்த அள்வுக்கு இல்லை என்றே கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X