ரையிட்டு வண்டி கிளம்பியாச்சு.. போறா வெடிய.. தீயாய் பரவும் போட்டோவால் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர்கள் வடிவேலுவும் பார்த்திபனும் அண்மையில் சந்தித்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம குஷியாகியுள்ளனர்.
நடிகர் வடிவேலுவும் நடிகர் பார்த்திபனும் வெற்றிக்கொடிக்கட்டு, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் காமெடிக்கு இன்றும் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் அண்மையில் இருவரும் சந்தித்துள்ளனர். அவர்கள் சந்தித்த போட்டோவை பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளீர்களா எப்போது அறிவிப்பு வெளியாகும் என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள படத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காத்திருக்கிறோம்
இந்த சந்திப்புக்காகவும் செய்திக்காகவும் காத்திருக்கிறோம் என்று கூறுகிறார் இந்த ரசிகர்
சீக்கிரம் ஜோடி போட்ருங்க
ரொம்ப நாள் ஆச்சு சார் நல்லா காமெடியை ரசிச்சு, சீக்கிரம் ஜோடி போட்ருங்க என் தெய்வமே என்கிறார் இவர்.
குத்துக்கு என்ன மதிப்பு
குத்துமதிப்பா.. இந்த குத்துக்கு என்ன மதிப்பு...
சார் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்... என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
எப்போ கலாட்டா?
உங்க கைய காலா நினைக்குறேன் சார். எப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலாட்டா பண்ணப்போறீங்க... என்று அவர்களின் டயலாக்கை வைத்தே சொல்கிறார் இந்த ரசிகர்.
போட்றா வெடிய..
ரையிட்டு வண்டி கிளம்பியாச்சு.... போட்றா வெடிய.... என்கிறார் இவர்.
சிரிப்பு நக்கல் ஸ்பெஷலிஸ்ட்ஸ்
குண்டக்க மண்டக்க காம்போ.. ஆனா செம காம்போ.. சிரிக்க மறந்தவர்களுக்கு சிரிப்பு மருந்து.. பரிந்துரைக்கப்பட்டது நக்கல் ஸ்பெஷலிஸ்ட் மிஸ்டர் பார்த்திபன் மற்றும் சிரிப்பு ஸ்பெஷலிஸ்ட் வடிவேலு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
விளம்பரமே தேவையில்ல
தயவுசெஞ்சு இந்த கூட்டணிய கொண்டு வாங்க சார்...இந்த கூட்டணி உறுதியானால் படத்துக்கு விளம்பரமே தேவையில்லை...முதல் நாளே நாங்க தியேட்டர்க்கு வந்துருவோம் என்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











