வெளியானது மகேஷ்பாபுவின் “ Sarkaru Vaari Paata “…மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்

ஹைதராபாத் : இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படம் இன்று உலகளவில் ரிலீஸ் ஆகியுள்ளது.

படம் பார்த்த மகேஷ் பாபுவின் ரசிகர்கள் படம் அருமையாக இருப்பதாகவும், மகேஷ்பாபு One man show ஆக படத்தை தூக்கி நிறுத்தியுள்ளார் எனவும் சொல்லி வருகின்றனர்.

படத்தின் விமர்சனம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சி வாயிலாக, யூடியூப் சேனல் வாயிலாக விமர்சனம் வந்து கொண்டிருக்க, அதே போல ட்விட்டர் மூலமாகவும் படத்தின் விமர்சனம் வந்த வண்ணம் உள்ளது.

 காத்திருப்பு நிறைவானது

காத்திருப்பு நிறைவானது

மகேஷ்பாபு கடைசியாக 2020ஆம் ஆண்டு ரிலீசான சரிலெரு நீகேவரு படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் நடித்த படம் " Sarkaru Vaari Paata ". கடந்த ஆண்டு முடிவடைந்த இந்தப் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக படம் ரிலீஸ் ஆகும் தேதி தள்ளிப்போனது. இதற்கிடையில் RRR, ராதே ஷ்யாம் மற்றும் கேஜிஎப் 2 படங்களின் வருகையால் படம் மேலும் தள்ளிப் போனது. இறுதியாக இன்று " Sarkaru Vaari Paata " திரைப்படம் ரிலீசாகி அவர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. படம் பற்றிய விமர்சனங்கள் பாசிட்டிவாக வந்து கொண்டிருக்கின்றன.

 ட்விட்டர் விமர்சனம்

ட்விட்டர் விமர்சனம்

ரசிகர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்கள் தாங்கள் பார்த்த படங்களின் விமர்சனத்தை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக சொல்லி வருகின்றனர். அதில் ஒருவர் " முதல் பாதி முழுவதும் கலகலப்பு. குடும்பங்களை கவரும் கமர்சியல். இரண்டாம் பாதி மாஸ். ரசிகர்களை கவரும் எலிமெண்ட் மற்றும் ரசிகர்களுக்கான ஆக்ஷன் காட்சிகள். முழு படத்தையும் மகேஷ்பாபு தனி ஒரு ஆளாக தூக்கி நிறுத்தியுள்ளார் என பதிவிட்டுள்ளார். " Sarkaru Vaari Paata " படத்தின் கதா நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். பரசுராம் இயக்கும் இந்தப் படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ், 13 Reels Plus உடன் இணைந்து தயாரித்துள்ளார் மகேஷ் பாபு.

 Mental Mass swag

Mental Mass swag

" Sarkaru Vaari Paata " படத்தின் ட்விட்டர் விமர்சனமாக மற்றொரு ரசிகர் " முழுத் திரையில் மகேஷ் பாபுவின் வெறித்தனமான கெத்தான பாய்ச்சல். கோடை காலத்தில் சென்சேஷனல் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை காணுங்கள் " என குறிப்பிட்டுள்ளார். இதேபோல வேறு ஒருவர் படத்திற்கு 3/5 புள்ளிகள் தந்து விரிவாக விமர்சித்துள்ளார். " மகேஷ் பாபு லுக்ஸ், கதாநாயகி கீர்த்தி சுரேஷ், படத்தின் சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்கள் படத்தின் பலம் எனவும், மெல்ல நகரும் இரண்டாம் பாதி மெதுவாக நகரும் சில காட்சிகள் நெகட்டிவ் என குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் ரசிகர்களுக்கு, பொதுமக்களுக்கு ஒரு நல்ல படம் என பதிவிட்டுள்ளார்.

 தியேட்டரில் படம் பார்த்த Namrata

தியேட்டரில் படம் பார்த்த Namrata

உலக அளவில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் மகேஷ் பாபுவின் " Sarkaru Vaari Paata " திரைப்படத்தை அவரது மனைவி Namrata இன்று ரசிகர்களோடு தியேட்டரில் பார்த்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒருபுறம் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் வந்து கொண்டிருக்க, குறிப்பிட்ட சிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் தந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் சிரஞ்சீவி குடும்பத்தின் ரசிகர்கள் என குறிப்பிட்டு மகேஷ் பாபுவின் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி தரும் வகையில் பதில் சொல்லி வருகின்றனர். படத்தின் ட்விட்டர் விமர்சனம் ஒருபுறம் இருக்க, இருவரது ரசிகர்களுக்கும் இடையே ஒரு வாக்குவாதம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X