காவி வேட்டி, கூடவே அந்த லேடி: வேண்டாம் பாக்யராஜ் சார், வேண்டாம்
சென்னை: இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கேப்டன் விஜயகாந்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வேண்டாம் சார் என்று தெரிவித்துள்ளனர்.
வரும் 23ம் தேதி நடக்கும் நடிகர் சங்க தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் அடங்கிய பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றது.

பாண்டவர் அணி ஆரம்பத்தில் இருந்தே நெகட்டிவ் விளம்பரம் மீது நம்பிக்கை வைத்துவிட்டது. இதனால் பாக்யராஜை குறி வைத்து விளாசிக் கொண்டிருக்கிறது. இது போதாது என்று இன்று விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார், ராதாரவி ஆகியோரை விமர்சித்துள்ளார்கள். அதை பார்த்த வரலட்சுமி சரத்குமார் கோபத்தில் கொந்தளித்து ட்விட்டரில் விஷாலை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டார்.
பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி பதிலுக்கு பாண்டவர் அணியை கழுவிக் கழுவி ஊத்தாமல் திரையுலக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது. சுவாமி சங்கரதாஸ் அணியினர் தேமுதிக தலைவரும், நடிகர் சங்கத்திற்காக பாடுபட்டவருமான விஜயகாந்தை நேற்று சந்தித்து ஆதரவு கோரியது.
விஜயகாந்தை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதை பார்த்தவர்கள் மூன்று விஷயத்தை கவனித்துள்ளனர். ஒன்று விஜயகாந்தின் குழந்தை சிரிப்பு, இரண்டாவது பாக்யராஜ் அணிந்திருந்த காவி வேட்டி, மூன்றாவது ஒரு லேடி.
புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,
பாக்யராஜ் சார், தயவு செய்து காவி வேட்டி கட்டி பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டாம். அது உங்களுக்கு எதிராக திரும்பிவிடும். உங்கள் அணிக்கு பெரிய கட்சியின் ஆதரவு இருக்கும் என்று பேச்சு கிளம்பியுள்ள நிலையில் காவி வேட்டியை தவிர்ப்பவது உங்களுக்கு நல்லது.
எதிரணியினரை திட்டித் தீர்க்காமல் அமைதியாக உங்கள் வேலையை மட்டும் பார்ப்பது பாராட்டுக்குரியது. இது உங்களின் நல்ல குணத்தை காட்டுகிறது. கேப்டனுடன் இருக்கும் புகைப்படத்தில் ஒரு லேடியை பார்த்தோம். அவர் உங்கள் அணியில் இருந்தால் உங்கள் அணியை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
அந்த லேடி ஊரில் உள்ளவர்களை எல்லாம் விளாசி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்துள்ளார். அதனால் அவர் சாவகாசம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











