Vijay - Venkat Prabhu - விஜய்யின் அரசியல் என்ட்ரி.. வெங்கட் பிரபுவை ஓகே செய்த முழு பின்னணி இதோ

சென்னை: Vijay - Venkat Prabhu (விஜய் - வெங்கட் பிரபு) விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி எப்படி உருவானது என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பீஸ்ட், வாரிசு படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ என பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் உலகம் முழுக்க வெளியாகிறது.

Fans have been surprised by new information about how the Vijay - Venkat Prabhu alliance came to be

எப்போது முடிகிறது ஷூட்டிங்: ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்துவிட்டதால் அந்த தேதியில் ரிலீஸ் செய்ய லோகேஷ் கனகராஜ் கடுமையாக வேலை செய்துவருகிறார். இப்போது நடந்துவரும் ஷூட்டிங் தமிழ்நாட்டிலேயே ஜூன் 15ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறதாம். அன்றோடு ஷூட்டிங்கை போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கவிருக்கின்றனர். ஜூலை மாதத்தில் விஜய் லியோ படத்துக்காக டப்பிங் கொடுக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது.

தளபதி 68: லியோ படம் எப்படி உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறதோ அதேபோல் விஜய்யின் அடுத்த படமும் அதே எதிர்பார்ப்பில் இருக்கிறது. அட்லீதான் படத்தை இயக்குவார் என முதலில் சொல்லப்பட்டது. அடுத்ததாக தெலுங்கு இயக்குநர்கள் சிலரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால் அதை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஹேப்பி மூடை இழந்தனர். அதனைத் தொடர்ந்து இப்போது வெங்கட் பிரபு இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.

எப்படி அமைந்தது கூட்டணி: விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி அமைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றுதான் விஜய்யின் அரசியல் திட்டம். அதாவது மாநாடு படத்தின் திரைக்கதை நன்றாக இருந்தாலும் அதில் ஈர்த்த மற்றொரு விஷயம் அரசியல் சப்ஜெக்ட்டும், அதை வெங்கட் பிரபு கையாண்டிருந்த விதமும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அரசியல் ஆசையில் இருப்பதாக கூறப்படும் விஜய்; அதனால் இம்ப்ரெஸ் ஆகி மாநாடு சமயத்திலேயே ஒரு கதையை கேட்டு அதை ஓகே சொல்லியிருக்கிறார் என ஒரு தகவல் உலாவுகிறது. அதேசமயம் மாநாடு படத்தில் வரும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் லியாகத் அலிகானின் பங்கு இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதற்கிடையே தளபதி 68 படத்தை ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸின் 100ஆவது படமாக உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு விஜய்யும் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால் அந்த நிறுவனம் இன்னமும் இயக்குநரையே இறுதி செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த தாமதம் விஜய்யை கொஞ்சம் யோசிக்க வைத்துவிட்டதால் ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் கேட்டிருந்த கதையில் நடிக்கலாம் என முடிவெடுத்துவிட்டார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X