வேதனையில் இருக்காங்க..ஆறுதல் சொல்லுங்க நாகசைத்தன்யா.. சமந்தாவுக்காக உருகும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை சமந்தா அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்திலாவது, ஆறுதலாக நாலுவார்த்தை பேசுங்கள் நாகசைத்தன்யா என்று ரசிகர்கள் வேதனையில் புலம்பி வருகின்றனர்.
நடிகை சமந்தாவும் நாகசைத்தன்யாவும் முதல் படத்தில் இணைந்து நடித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் சமந்தா பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.
இதையடுத்து, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக இணையத்தில் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இதனால், ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

நடிகை சமந்தா
இந்த நிலையில் நடிகை சமந்தா தனக்கு உடல்ரீதியாக இருக்கும் பிரச்சனை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நான் நடித்த யசோதா டீசருக்கு அமோக ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு எனது நன்றி. நான் தற்போது மயோசிட்டிஸ் (Myositis) எனப்படும் ஆட்டோ இம்யூன் என்ற பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறேன்.

குணமடைந்து வருகிறேன்
இந்த பிரச்சனையிலிருந்து குணமடைந்த பிறகு இதுகுறித்து பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட தற்போது சிகிச்சைக்கு அதிக நேரமாகிவிட்டது. இதனால், இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் தற்போது மெதுவாக குணமாகி கொண்டிருக்கிறேன்.

நல்ல நாட்களும் உண்டு..கெட்ட நாட்களும் உண்டு
இந்த பாதிப்பை ஏற்றுக்கொண்டு, சிகிச்சையை போராடி பெற்றுக் கொள்வதும் அவசியமான ஒன்றாக கருதுகிறேன். நான் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்று மருத்துவர்கள் எனக்கு நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு என்பது போல் எனக்கும் அதேபோல் உண்டு என்பதை நான் உணர்கிறேன். என மிகுந்த உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார்.

புலம்பும் ரசிகர்கள்
நடிகை சமந்தாவின் இந்த பதிவினைப்பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள் பதறிப்போய் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். என்னத்தான் ரசிகர்கள் ஆறுதல் கூறி சமந்தாவை தேற்றினாலும், நீங்கள் சொல்லும் ஆறுதல் போல வராது நாகசைத்தன்யா என்றும், அவருக்கு நாலுவார்த்தை ஆறுதலாக கூறுங்கள் என சமந்தாவின் ரசிகர்கள் ட்விட்டரில் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











