GOAT படத்தின் புதிய போஸ்டரை டீகோட் செய்யும் ரசிகர்கள்.. இந்தா ஆரம்பிச்சிட்டாங்களே
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கி அரசியலில் முழு கவனம் செலுத்தவிருக்கும் அவர் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கிறது. அநேகமாக இன்னும் ஒரு ஷெட்யூலுடன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
டாப் நடிகர்களில் ஒருவரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கடந்த சில வருடங்களாகவே பலமாக பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. எந்த அலப்பறையும் போடாமல் அரசியல் கட்சி ஆரம்பித்த விஷயத்தை சிம்ப்பிளாக ட்விட்டரில் அறிவித்துவிட்டார் விஜய். மேலும் மக்கள் பணியில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்றும் கூறிவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் சோகமடைந்திருக்கின்றனர்.

GOAT: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார். இதில் அவருடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு, பிரேம்ஜி, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இப்போதே நிலவிவருகிறது.
மும்முரமடைந்த ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. வெங்கட் பிரபு எப்போதும் வித்தியாசமான முறையில் மேக்கிங் செய்வார் என்பதால் இதில் எந்த மாதிரியான மேக்கிங்கை கையாண்டிருக்கிறார் என்பதை பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். அஜித்துக்கு எப்படி மங்காத்தா படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தாரோ அதேபோல் GOAT படத்தையும் மெகா ஹிட்டாக கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
க்ளைமேக்ஸ் ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எப்போதும் பக்காவாக பிளான் போட்டு வேலை செய்யும் வெங்கட் பிரபு; இதில் கூடுதல் வேகம் காட்டியிருக்கிறார். இதனால் விஜய்யே இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. கடைசியாக கேரளாவில் ஷூட்டிங் நடந்தது. இப்போது ரஷ்யாவில் ஷூட்டிங் நடந்துவருகிறது.
படம் ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி படமானது செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸாகவிருக்கிறது. அந்த அறிவிப்போடு சேர்த்து புதிய போஸ்டரையும் வெளியிட்டது.. அதில் விஜய் கண்ணாடி அணிந்தபடி படு க்யூட்டாக இருந்தார்.
டீகோட் செய்யும் ரசிகர்க: இந்நிலையில் படத்தின் போஸ்டரை வைத்து ரசிகர்கள் டீகோட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது அந்தப் போஸ்டரில் பிப்ரவரி 16, 2000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உடனடியாக அன்றைய தினத்தில் உலக அளவில் என்ன நடந்தது என்பது குறித்து நெட்டிசன்கள் அலசி ஆராய ஆரம்பித்தனர். அதன்படி அந்த நாளில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விமான விபத்து நடந்திருப்பதாக கூறுகிறார்கள். விஜய் இந்தப் படத்தில் விமானியாக நடிக்கிறார். எனவே அந்த தேதிக்கும் படத்துக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருப்பதாக இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











