நாக்க புடுங்கிட்டு சாவேன்.. ரஜினியை விளாசிய சத்யராஜ்.. அந்த பிரச்னையை இப்போ கிளப்புறாங்களே ப்பா
சென்னை: ரஜினிகாந்த்தும், சத்யராஜும் சேர்ந்து கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பெற்றிருக்கிறது. மேலும் பல வருடங்களுக்கு ரஜினிகாந்த்தும், சத்யராஜும் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி படத்துக்காகத்தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் வெயிட்டிங். ரஜினியை வைத்து லோகேஷ் என்ன மாதிரியெல்லாம் சம்பவம் செய்திருக்கிறாரோ என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் சத்யராஜ், அமீர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா என பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸாகிறது.
ரஜினி Vs சத்யராஜ்: இதற்கிடையே ரஜினியும், சத்யராஜும் பல ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்திருப்பதும் பலரது கவனத்தை பெற்றிருக்கிறது. ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் மிஸ்டர் பாரத் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அந்தப் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இருப்பினும் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு வந்துவிட்டதாக ஒரு பேச்சு ஓடியது.
சிவாஜிக்கு நோ: அதனால்தான் ஷங்கர் இயக்கத்தில் உருவான சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜ் ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; நான் இப்போது நடித்தால் என்னுடைய அடுத்த படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார் என்றும் தகவல்கள் இருக்கின்றன. இதனால்தான் அவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து இணைந்தது ஆச்சரியத்தை உண்டு செய்திருக்கிறது.

என்ன பிரச்னை?: ரஜினிக்கும், சத்யராஜுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு மேற்கொண்டு விரிசல் ஆனது என்றால் காவிரி பிரச்னையில்தான் என திரைத்துறையினர் சொல்வார்கள். அதாவது காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தர மறுத்த கர்நாடகாவை கண்டித்து நடிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள். அப்போது சத்யராஜ் கொஞ்சம் உணர்ச்சி பொங்க பேசியிருப்பார்.
அந்தப் பேச்சில் அவர், 'யார் பெயரை சொன்னால் நீங்கள் கை தட்டுவீர்கள் என்று தெரியும். ஆனால் அந்த பெயரை சொல்லி கை தட்டல் வாங்குவதற்கு நாக்கை புடுங்கிட்டு சாவேன்' என குறிப்பிட்டிருந்தார். அது, மறைமுகமாக ரஜினிகாந்த்தைத்தான் தாக்கி பேசியதுதான் என்ற கணிப்பு இன்றளவும் பெரும்பான்மையானோரிடம் உண்டு.
பஞ்சாயத்தை ஆரம்பித்த சத்யராஜ்: இந்நிலையில் அதே சத்யராஜ் கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாழில் ரஜினிகாந்த்தை புகழ்ந்து பேசிய வீடியோவையும், காவிரி பிரச்னையில் பேசிய வீடியோவையும் சேர்த்து போட்டு; எப்படியெல்லாம் பேசிய சத்யராஜ் இப்போது இப்படி பேசுகிறார். தன்னை இகழ்ந்தவரை புகழ்ந்து பேச வைத்துவிட்டார் ரஜினிகாந்த். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











