கூலி ட்ரெய்லர் எப்படி இருக்கு?.. ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்தான் போல.. என்ன சொல்கிறார்கள் அவர்கள்?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ட்ரெய்லர் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றாலும்; பொதுவான ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் ட்ரெய்லர் பற்றிய தனது கருத்துக்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இந்த வருடம் உச்சபட்ச எதிர்பார்ப்பை பெற்றிருக்கும் படம் என்றால் அது கூலிதான். ரஜினிகாந்த்தும், லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக இணைந்திருப்பதால் கண்டிப்பாக தரமான சம்பவம் செய்யும் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதுமட்டுமின்றி ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யப்போகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் இப்படம் பெறும் என்பது அவர்களது நம்பிக்கை.

இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 14ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. வெளிநாடுகளில் படத்தின் ப்ரீ புக்கிங் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இதில் ரஜினி, அமீர் கான், சத்யராஜ், லோகேஷ் கனகராஜ் என கூலி படத்தின் மொத்த டீமும் கலந்துகொண்டிருக்கிறது. நிச்சயம் தலைவரின் பேச்சில் அனல் பறக்கும் எனவும் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

Fans have started sharing their thoughts on the trailer of Rajinikanth s Coolie
Photo Credit:

ட்ரெய்லர் வெளியானது: இதற்கிடையே இன்று மாலை 7 மணிக்கு கூலி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி ரிலீஸ் செய்யப்பட்டது. ட்ரெய்லரில் ரஜினிகாந்த்தின் எனர்ஜி, அனிருத்தின் இசை உள்ளிட்டவைகள் எல்லாம் பட்டாசாய் இருக்கின்றன. வின்டேஜ் காலத்து ரஜினியை இயக்குநர் இதில் கொண்டு வந்திருக்கிறார் என்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

இதுதான் கதையா?: ட்ரெய்லரை பார்த்து படத்தின் கதையை கணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, ரஜினியும், சத்யராஜும் நண்பர்கள். நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், அமீர் கான் அடங்கிய நெட்வொர்க்குக்கும், சத்யராஜுக்கும் மோதல் எழ; அவர்கள் சத்யராஜை கொலை செய்துவிட; அதற்கு பழிவாங்குவதற்காக ரஜினிகாந்த் என்ட்ரி கொடுப்பது போன்று ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் இது பழி வாங்கும் கதைதானா என்று பேச தொடங்கியிருக்கிறார்கள்.

சர்ப்ரைஸ் இருக்கும்: இருப்பினும் இவ்வளவு சாதாரணமான ஒன்லைனை லோகேஷ் கனகராஜ் தனது மேக்கிங்கில் சரிகட்டிவிடுவார் எனவும் ஒருதரப்பினர் கூறுகிறார்கள். இந்நிலையில் ட்ரெய்லர் பற்றிய தங்களது கருத்துக்களை ரசிகர்கள் பகிர தொடங்கியிருக்கிறார்கள். ஒரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், 'கூலி ட்ரெய்லர் சுமாராகத்தான் இருக்கிறது. டோலிவுட் ஆக்‌ஷனை பார்ப்பது போன்று இருக்கிறது. ஒரு ஃப்ளாப் வந்துகொண்டிருக்கிறது' என குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல் இன்னொரு ரசிகரோ, 'கூலி ட்ரெய்லர் பெரிதாக இம்ப்ரெஸ் செய்யவில்லை' என தெரிவித்திருக்கிறார். இப்படி பல ரசிகர்கள் தங்களது அப்செட்டை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. ஆனால் இப்படி நெகட்டிவ் கமெண்ட்ஸை வேண்டுமென்றே பரப்புகிறார்கள். ட்ரெய்லரில் ஒரு குறையும் இல்லை என அவர்களுக்கு தலைவரின் ரசிகர்களும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X