இன்றிலிருந்து நீங்கள்.. பிரபல நடிகருக்கு இப்படியொரு பட்டம் கொடுத்து பாராட்டிய பாசக்கார ஃபேன்ஸ்!

By

மும்பை: புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் நடிகர் சோனு சூட்டிற்கு ரசிகர்கள் புதிய பட்டம் ஒன்றை கொடுத்து பாராட்டியுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட பலர், சொந்த ஊர் திரும்ப முடியாமல் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பலர் உதவி வருகின்றனர்.

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

நடிகர் சோனு சூட், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த செலவில் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். விமானம் மற்றும் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்து அவர்களை அனுப்பி வருகிறார். கொரோனா நோயாளிகளை காப்பாற்ற பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர்.

நிஜ ஹீரோ

நிஜ ஹீரோ

இதுபற்றி பேசிய அவர், இந்த இக்கட்டானச் சூழலில், ஏசி அறையில் அமர்ந்தபடி ட்வீட் போட்டுக்கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்பதால் களத்தில் இறங்கினேன்' என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவரை பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்துவரும் அவரை, நிஜ ஹீரோ என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

தனி விமானம்

தனி விமானம்

சோனு சூட்டின், உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு மறுக்காமல் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், கேரளாவில் சிக்கியிருந்த 167 புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களது சொந்த மாநிலமான ஒடிசா செல்வதற்கு, தனி விமானத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஏர் ஏசியா விமானம்

ஏர் ஏசியா விமானம்

பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன், மும்பையில் சிக்கிய 173 புலம் பெயர் தொழிலாளர்களை டேராடூனுக்கு தனி விமானத்தில் அனுப்பி வைத்தார். தொடர்ந்து உதவி செய்து வரும் நடிகர் சோனுசூட்டை பாராட்ட, ஒடிசாவை சேர்ந்த அவரது ரசிகர்கள் சிலர், முடிவு செய்தனர். இதையடுத்து புவனேஸ்வர் நகரின் ஒரு பகுதியில், அழகான விளம்பர தட்டியை வைத்துள்ளனர்.

பைட்டர் கிங்

பைட்டர் கிங்

கூடவே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் ஒடிஷா நடிகர் சயியா சாச்சி மிஸ்ரா, நடிகை ராணி பண்டா ஆகியோருக்கும் கட் அவுட் வைத்து, கோலம்போட்டு அந்த இடத்தை அலங்கரித்தனர். அந்த விளம்பர தட்டியில், அவர்களுக்கு கொரோனா பைட்டர் கிங் என்று பட்டம் கொடுத்துள்ளனர். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

தகுதியானவன்

தகுதியானவன்

இந்த வீடியோ வைரலானது. இதற்கு ஏராளமான ரசிகர்கள், சோனு சூட் தகுதியானவர்தான் என்று கூறியிருந்தனர். இந்நிலையில், இந்த வீடியோவை கண்ட சோனு சூட், இது அழகாக இருக்கிறது. ஆனால், இதற்கு நான் தகுதியானவன் இல்லை. உங்கள் அன்பும் வாழ்த்துகளுமே, என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X