Prabhas: தொடர்ந்து தோல்விப்படம்... வருத்தத்தில் பிரபாஸ்.. கைக்கொடுக்குமா சலார்?

சென்னை: பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், சலார் திரைப்படமாவது வெற்றியடைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் பிரபாஸ் உலகம் முழுவதும் பிரபலமானார். முதல் பாகம் வெளியாகி ஆயிரம் கோடியை வசூலித்தது.

இதைத்தொடர்ந்து வெளியான பாகுபலி இரண்டாம் பாகமும் மிரட்டலாக இருந்தது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் பிரபாஸின் நடிப்பு அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

Fans hope that Prabhas Movie Salaar will be a hit

பாகுபலி: பாகுபடத்திற்கு பின் வம்சி கிருஷ்ணா தயாரிப்பில் சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் சாஹோ படம் வெளியானது. இதில் அருண்விஜய், சிரத்தா கபூர், ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படம் தோல்வியைச்சந்தித்து.

ராதே ஷ்யாம்: இந்த படத்தை தொடர்ந்து ராதே ஷ்யாம் திரைப்படம் தமிழ், தெலுங்கு,இந்தி, மலையாளம் என பான் இந்திய திரைப்படமாக வெளியானது. இப்படத்தில் கை ரேகைப்பார்க்கும் ஜோதிடர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தபடம் வந்த சுவடே தெரியாமல் பெட்டிக்குள் சென்றது. இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

Fans hope that Prabhas Movie Salaar will be a hit

ஆதிபுருஷ் மோசமான விமர்சனம்: அடுத்தடுத்து இரண்டு படமும் தோல்வியால் நடிகர் பிரபாஸ், ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் திரைப்படத்தை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால், இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பல பிரச்சனைகளை சந்தித்து படத்தின் ரிலீஸ் தேதி இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் வெளியே ஆதிபுருஷ் படம் திரையரங்கில் காற்று வாங்கியது. மேலும், ராமராக நடித்த பிரபாஸின் நடிப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

கைக்கொடுக்குமா: பாகுபலி படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரபாஸ் அடுத்தடுத்து தோல்விப்படங்களை கொடுத்து வருவதால் அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் ஜுலை 6ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்திற்கு கே.ஜி.எஃப் படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தொடர் தோல்வி படத்தால் வருத்தத்தில் இருக்கும் வாசனுக்கு இந்தபடம் கைக்கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X