கப்பர் சிங் இயக்குனருடன் பவன் கல்யாண்…பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ஹைதராபாத்: ஹரிஷ் சங்கர் தெலுங்கு படத்துறையில் உச்ச இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர். அவர் பல வெற்றிப் படங்களை தந்தவர்.

ராம் கோபால் வர்மா தயாரித்த Shock திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகமானவர்.

தற்போது அவர் பவன் கல்யாணை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். அதை சார்ந்து அவர் நெகிழ்ச்சியான ஒரு பதிவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பவன் கல்யாண் புதிய படம்

பவன் கல்யாண் புதிய படம்

கடைசியாக பவன் கல்யாண் நடித்து ரிலீசான படம் Bheemla Naayak. படம் சூப்பர் ஹிட்டானது. பவன் கல்யாண் பவர் காட்டும்படி அது அமைந்தது. இதனால் பவன் கல்யாண் தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். Bhavadheeyudu bhagat singh என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்க உள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தொழில்நுட்ப கலைஞர்கள்

பவர்ஃபுல் மாஸ் கதைக்களத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர். இவர் இதற்கு முன்னர் பவன் கல்யாணை வைத்து இயக்கிய கப்பர் சிங் திரைப்படம் ஆந்திராவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக பேசப்பட்டது. இந்த படத்தில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் முடிவாகி உள்ளார். மிக பிரம்மாண்டமாக எடுக்கப் போகும் இந்த படத்தின் தயாரிப்பாளர் மைத்திரி மூவி மேக்கர்ஸ். மேலும் பல முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து 2012ஆம் ஆண்டு ரிலீசான படம் கப்பர் சிங். படம் சூப்பர் ஹிட். அதுவரை ஆந்திராவில் வேறு எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை செய்தது. கப்பர் சிங்குக்கு முன்பு கப்பர் சிங்குக்குப் பின்பு என சொல்லும்படி பேசப்பட்டது. சுருதி ஹாசன் ஆந்திராவில் முன்னணி ஹீரோயினாக காரணமாக இருந்த படம். வசூல் ரீதியாக மட்டுமே இல்லாமல் பல விருதுகளையும் அள்ளியது. பவன்கல்யாண் சிறந்த நடிகர் விருதைப் பெற்றார். ஹரி ஷங்கர் மற்றும் பவன்கல்யாண் கூட்டணி மறுபடியும் இணைந்திருப்பதால் பல வசூல் சாதனைகள் நிகழும் என சொல்லப்படுகிறது.

நெகிழ்ச்சி தருணம்

நெகிழ்ச்சி தருணம்

இதற்கிடையில் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் பவன் கல்யாணுடன் இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு அவர்களது சந்திப்பைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் " ஒவ்வொரு முறை உங்களை சந்திக்கும் போதும் உரையாடும் போதும் இனம் புரியாத ஒரு பதட்டம் வருகிறது. ஷூட்டிங் நடைபெறவிருக்கும் நாளுக்காக காத்திருக்க முடியவில்லை " என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். தற்போது இணையதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X