விஜய்க்கு பிரம்மாண்ட சிலை...அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்

சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படம் 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதமே ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் ரிலீசாக வெளியிடப்பட்டது.

தாமதமாக ரிலீசானாலும் பிரம்மாண்ட வெற்றியை இந்த படம் பெற்றது. இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல், யூட்யூப்பில் ரவுடி பேபி பாடலுக்கு பிறகு அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடலாக உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த பாடலாகவும் இது அமைந்தது.

சாதனை படைத்த பீஸ்ட் ஃபஸ்ட்லுக்

சாதனை படைத்த பீஸ்ட் ஃபஸ்ட்லுக்

இதைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டது. இந்தியாவிலேயே அதிகமானவர்கள் பார்த்த ஃபஸ்ட்லுக் என்ற சாதனையை படைத்தது.

டிரெண்டிங் ஆன விஜய்

டிரெண்டிங் ஆன விஜய்

பீஸ்ட் ஃபஸ்ட்லுக் வெளியீட்டிற்கு பிறகு அதிகாரப்பூர்வ அப்டேட் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இன்று விஜய் தொடர்ந்து ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார். இதற்கு காரணம் அவரது ரசிகர்கள் தான்.

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்

சென்னைக்கு அருகில் உள்ள பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் விஜய்க்காக ஆள் உயர வெண்கல சிலை ஒன்றை அமைத்துள்ளனர். ரஜினி, கமலுக்கு கூட இதுவரை பிரம்மாண்ட கட் அவுட் தான் வைத்துள்ளனர். ஆனால் விஜய்க்கு அவரது ரசிகர்கள் சிலையே அமைத்துள்ளனர்.

வைரலாகும் விஜய் சிலை ஃபோட்டோ

வைரலாகும் விஜய் சிலை ஃபோட்டோ

மங்களூரு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை மங்களூரு விஜய் மக்கள் இயக்க செயலாளர் பிஸி ஆனந்த் திறந்து வைத்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X