பேய் வயித்துல பெறந்த பூதத்தை விட எங்களுக்கு பொறுக்கி 'சாமி'யை தான் பிடிச்சிருக்கு: உங்களுக்கு?
Recommended Video

சென்னை: பேய் வயித்துல பிறந்த பூதத்தை விட ரசிகர்களுக்கு பொறுக்கி ஆறுச்சாமியை தான் பிடித்துள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சாமி ஸ்கொயர் படத்தின் 2வது ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
முதல் ட்ரெய்லரை விட இரண்டாவது ட்ரெய்லர் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பூதம்
சாமி ஸ்கொயர் படத்தின் முதல் ட்ரெய்லரில் அடிதடி ரத்தமாக இருந்தது. நான் தாய் வயித்துல பிறக்கவில்லை, பேய் வயித்துல பிறந்தேன் என்று ஆவேசமாக வசனம் பேசினார் விக்ரம். நான் சாமி இல்ல பூதம் என்று டயலாக் விட்டார். ஹரி படம் என்றால் டாட்டா சுமோ, ஹீரோ ஹைபிட்ச்சில் கத்தாமலா? முதல் ட்ரெய்லரில் ஐஸ்வர்யா ராஜேஷை காட்டவில்லை. சொல்லப்போனால் முதல் ட்ரெய்லர் அநியாயத்துக்கு சீரியஸாக இருந்தது.

ட்ரெய்லர்
முதல் ட்ரெய்லரை பார்த்த போது சாமி படம் போன்று இந்த படத்தில் காமெடி எல்லாம் இருக்காதோ. ஹரி ஓவராக சீரியஸாகிவிட்டாரே என்று ரசிகர்கள் நினைத்தனர். அவர்களின் ஃபீலிங்கை இரண்டாவது ட்ரெய்லரில் போக்கியுள்ளார் ஹரி. ஒன்னுச் சாமி, இரண்டுச் சாமி, மூனுச்சாமி, நாலுச்சாமி, அஞ்சுச்சாமி, ஆறுச்சாமி என்று இரண்டாவது ட்ரெய்லரில் விக்ரம் கர்ஜிப்பது ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

காதல்
முதல் ட்ரெய்லரை போன்றே இரண்டாவது ட்ரெய்லரிலும் அடிதடியாக இருந்தாலும் இதில் காதல், காமெடி ஆகியவையும் உள்ளது ஆறுதலாக இருக்கிறது. த்ரிஷா மாமியை பார்த்த இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை பார்க்க ஏதோ உருத்தலாக உள்ளது. எனக்கு தேவை மூனு தல என்று விக்ரம் பேசும் பன்ச் வசனம் பிடித்துள்ளது.

பொறுக்கி
நான் போலீஸ் இல்ல பொறுக்கி என்று கூறி விக்ரம் தனது மீசையை முறுக்குவதோடு ட்ரெய்லர் முடிகிறது. ரசிகர்களுக்கு பேய், பூதத்தை விட பொறுக்கியை தான் பிடித்துள்ளது மிஸ்டர் ஹரி. அந்த பொறுக்கி பீரை மோராக்கி சாப்பிடுவார் என்று எதிர்பார்த்தால் அதை தவிர்த்துவிட்டார். ஹீரோவுக்கான பாடல் நன்றாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் விக்ரமுக்கு ஏற்ற ஜோடியாக தெரிகிறார்.


Click it and Unblock the Notifications











