'அந்த மாதிரி' லாம் நடிச்சாங்க.. இப்போ இப்படி ஆயிட்டாங்களே! ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை விசித்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
நடிகை விசித்ரா 1992ஆம் ஆண்டு வெளியான சின்னதாயே படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.
கவர்ச்சி நடிகையாகவும் நெகட்டிவ் கேரக்டர்களிலும் நடித்து வந்தார். முத்து படத்தில் இவர் ரதி தேவி கேரக்டரில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

திருமணம்
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் விசித்ரா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்படை நிறுத்திக் கொண்டார்.

ராசாத்தி சீரியல்
கணவர் மற்றும மூன்று மகன்களுடன் மைசூரில் செட்டில் ஆகியுள்ள விசித்ரா. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த விசித்ரா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி சீரியல் மூலம் மீண்டும் தலை காட்டியிருக்கிறார்.

கை நிறைய வளையல்
இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் விசித்ரா தனது போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மஞ்சள் நிற புடவையில் கை நிறைய வளையல், நெற்றியில் பெரிய பொட்டு என அம்மன் போல உள்ளார் விசித்ரா.
ஹோம்லியா இருக்கீங்க
விசித்ராவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த வயதிலும் உங்களின் அழகு கொஞ்சமும் குறையவில்லை. ரொம்ப ஹோம்லியா இருக்கீங்க என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

சென்னையில் விசித்ரா
ராசாத்தி சீரியல் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்சியாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராசாத்தி சீரியலுக்காக சென்னையில் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் விசித்ரா.
வெள்ளித்திரை நட்சத்திரங்கள்
ராசாத்தி சீரியலில் விசித்ரா நெகட்டிவ் ரோலில் நடித்து வருகிறார். அவர் தவிர பல்வேறு வெள்ளித்திரை நட்சத்திரங்களும் அந்த சீரியலில் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











