டார்கெட் பண்றவங்களுக்கு பார்வையாலேயே பதில் சொல்லும் ஷிவானி.. கிறங்க வைக்கும் க்யூட் ரியாக்ஷன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடிகை ஷிவானி ஓரங்கட்டப்படும் நிலையில் தனது பார்வையிலேயே அனைவருக்கும் பதில் கொடுத்து வருகிறார் ஷிவானி.
Recommended Video
சீரியல் நடிகையான ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களிலேயே மிகவும் சிறுவயது பெண்ணாக உள்ளார் ஷிவானி.
சமூக வலைதளங்களில் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஷிவானி, கிளாமர் காட்டுவதற்கு கொஞ்சமும் தயங்கவில்லை.

மிங்கிள் ஆகவில்லை
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஷிவானி, ரொம்பவே ரிசர்வ் டைப்பாக உள்ளார். மற்றவர்களுடன் மிங்கிள் ஆக யோசிக்கிறார். இன்னும் பல ஹவுஸ்மேட்ஸ்களுடன் பேசவே இல்லை ஷிவானி.

பாவம்யா குழந்தை
இதனால் நேற்றைய எபிசோடில் பலரும் அவருக்கு புரோக்கன் ஹார்ட்டுகளை கொடுத்தனர். அப்போதே ஷிவானியின் முகம் மாறிவிட்டது. பாவம்யா குழந்தை என நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக டிவிட்டி வந்தனர்.

பார்வையாலேயே பதில்
ஆனால் தன்னை ஒருவர் டார்கெட் செய்கிறார் என்றதும் வாயை கொடுத்து வார்த்தையை விட்டு மல்லுக்கட்டாமல் பார்வையாலேயே பதிலடி கொடுத்து வருகிறார் ஷிவானி. குறிப்பாக நேற்று சனம் மற்றும் சம்யுக்தா ஆகிய இருவரும் சேர்ந்து ஷிவானியை கார்னர் செய்வது போல் நடந்து கொண்டனர்.

வலிக்காமல் பேசுகிறார்
வாயே திறக்காமல் புருவத்தை உயர்த்தியும், மெல்ல சிரித்தும் தனது பதிலை கூறினார். மற்றவரின் அனுமதியுடன் தனது கருத்து சொல்வது, அமைதியாய் இருப்பது.. மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது என பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் ஷிவானி.

க்யூட் மேனரிசம்
ஏற்கனவே கவர்ச்சி போட்டோக்களால் இளசுகளை கட்டிப்போட்டு வைத்துள்ள ஷிவானி தற்போது தன்னுடைய மேனரிசம், க்யூட் ரியாக்ஷன்ஸ் போன்றவற்றாலும் ரசிகர்களை கவர தொடங்கியுள்ளார். ஏற்கனவே ஷிவானிக்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











