சாரட் வண்டியில் ஜம்முன்னு ஊர்வலமாக வந்த மெர்சல் அரசன் விஜய்
சென்னை: விஜய்யின் மெர்சல் பட கட்அவுட்டை சாரட் வண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர் ரசிகர்கள்.
விஜய்யின் மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது. படம் ரிலீஸாவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் தடைகளை தாண்டி படம் ரிலீஸானது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.
விஜய் அண்ணா அரசியலுக்கு வாங்கண்ணா என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

வசனம்
மெர்சல் படத்தில் மத்திய, மாநில அரசுகளை துணிச்சலாக விளாசியுள்ளார் விஜய். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் அண்ணா அரசியலுக்கு வருகிறார் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

மெர்சல்
மெர்சல் படம் ஓடும் தியேட்டர்களுக்கு முன்பு உயரமான கட்அவுட்டுகளை வைத்து அமர்களப்படுத்தியுள்ளனர் ரசிகர்கள். கட்அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்து மலர் தூவினர்.

கட்அவுட்
விஜய்யின் மீது உள்ள அளவு கடந்த அன்பால் ரசிகர்கள் மெர்சல் கட்அவுட்டை சாரட் வண்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அசத்திவிட்டனர்.

ஆட்டம்
ரசிகர்கள் மட்டும் அல்ல ரசிகைகளும் மெர்சல் திருவிழாவை அமோகமாக கொண்டாடி மெர்சலாக்கிவிட்டனர். தியேட்டர்களில் ரசிகர்களுக்கு இணையாக ரசிகைகளும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











