ஒரே வார்த்தை... ஏர்போர்ட்டில் அஜித்தை கோபப்படுத்திய ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ

சென்னை ஏர்போர்ட்டில் ரசிகர்கள் கடவுளே என தன்னை பார்த்து கூறியதால் நடிகர் அஜித் கோபமடைந்தார்.

Recommended Video

வாவ்.. நம்ம 'தல'யா இது..செம ஹேன்ட்சம்! வைரலாகும் நியூ லுக்! | Ajith New Look Photos viral

சென்னை: சென்னை ஏர்போர்ட்டில் நடிகர் அஜித் கோபப்படும் வகையில் அவரது ரசிகர்கள் நடந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்துக்கு மிகப் பெரிய ரசிகர் படை உள்ளது. ஆனால் அவர் தனது ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டதால், சமூக வலைதளங்கள் வாயிலாக மட்டுமே ரசிகர்கள் தங்களது பலத்தை காட்டி வருகின்றனர்.

டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது மோதிக்கொள்வது வாடிக்கை தான். தியேட்டரில் நேரில் சந்திக்கும் போது சில நேரங்களில் இது கைக்கலப்பாக கூட மாறியிருக்கிறது.

அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள்

ஆனால் அஜித் இதுகுறித்து இதுவரையில் கருத்து எதுவும் தெரிவித்தது இல்லை. தான் உண்டு,நடிப்பு உண்டு என்று மட்டுமே இயங்கி வருகிறார். ரசிகர்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தக் கூடாது என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறார்.

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

ஆனால் அஜித்தை பொது இடங்களில் பார்க்கும் போது ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுப்பது அவ்வப்போது நடக்கிறது. நேற்றைக்கு துப்பாக்கி சுடும் போட்டிக்காக சென்னையில் இருந்து டெல்லி செல்லும் போது விமான நிலையத்தில் வைத்து அஜித்துடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

புகைப்படங்கள் வைரல்

புகைப்படங்கள் வைரல்

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அஜித்தின் புதிய தோற்றத்தை பார்த்து அவரது ரசிகர்கள் வியப்படைந்தனர். எப்போதும் தாடியுடன், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் அஜித், அந்த புகைப்படத்தில் க்ளீன் ஷேவ்டாக மீசையுடன் தோன்றியது, தல ரசிகர்களை மகிழ்ச்சியடை செய்தது.

அஜித் கோபம்

இந்நிலையில் டெல்லியில் இருந்து அஜித் சென்னை திரும்பினார். அவரை ரசிகர்கள் ஏராளமானோர் சூழ்ந்துகொண்டனர். அப்போது சிலர் அஜித்தை நோக்கி 'கடவுளே, கடவுளே' என்று கத்தினர். இதனால் அஜித் கடும் கோபத்துக்கு ஆளானார். உடனடியாக அவர் அங்கிருந்து வெளியேறி, காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X