பிடித்த போட்டியாளர்.. பரிசுகளால் திணற வைத்த ரசிகைகள்.. திக்குமுக்காடிப் போன பிக்பாஸ் பிரபலம் !

Recommended Video

Fans met Biggboss Cheran and presents gifts | Bigg Boss Cheran | சேரனை சந்தித்த பிக் பாஸ் ரசிகர்கள்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரனை பிடித்த போட்டியாளர் என கூறி 100 ரசிக ரசிகைகள் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 106 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

இயக்குநர் சேரன், நடிகைகள் வனிதா, மதுமிதா, அபிராமி, சாக்ஷி அகர்வால், ரேஷ்மா, நடிகர் சரவணன், ஃபாத்திமா பாபு, கவின் சாண்டி, முகென், தர்ஷன், மோகன் வைத்யா என 15 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

மாடலான மீரா மிதுன் 2 நாட்கள் தாமதமாகவும் நடிகை கஸ்தூரி வைல்டு கார்டு என்ட்ரியாகவும் பங்கேற்றனர். இதில் முகென் பிக்பாஸ் டைட்டில் வின்னரானார். அவருக்கு பிக்பாஸ் ட்ரோபியும் 50 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்பட்டது.

புதுபுது உறவுகள்

புதுபுது உறவுகள்

வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே இந்த பிக்பாஸும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அதே நேரத்தில் அப்பா மகள், அண்ணன் தம்பி, அண்ணன் தங்கை என புதுபுது உறவுகளும் மலர்ந்தன.

சேரப்பா..

சேரப்பா..

குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் கண்ணியத்துடனும் முதிர்ச்சியுடனும் நடந்துகொண்டவர் இயக்குநர் சேரன் தான். லாஸ்லியா தனது அப்பாவை போன்று இருப்பதாக கூறி சேரனை சேரப்பா என அழைக்க தொடங்கினார்.

பிடித்த போட்டியாளர்

பிடித்த போட்டியாளர்

இதனால் தமிழ் மக்கள் மத்தியில் இன்று சேரப்பாவாகவே மாறிவிட்டார் சேரன். அவருடைய நேர்மையான அணுகுமுறையால் பார்வையாளர்களின் ஃபேவரைட் கன்டெஸ்ட்டன்ட் ஆனார் சேரன்.

பரிசு பாராட்டு

பரிசு பாராட்டு

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழகம், பெங்களூரு மற்றும் சிங்கப்பூரில் இருந்து 100 பேர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்கு பிடித்த போட்டியாளர் என இயக்குநர் சேரனை பாராட்டியுள்ளார்கள். மேலும் பரிசுப்பொருட்களையும் அள்ளிக்கொடுத்து திக்குமுக்காட செய்துள்ளனர்.

டிவிட்டரில் நெகிழ்ச்சி

இதனால் உருகிப்போன இயக்குநர் சேரன் அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். அந்த போட்டோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X