யக்கா அஞ்சனா அக்கா, இப்படி பண்ணிட்டீங்களேக்கா: ரசிகர்கள் ஃபீலிங்
Recommended Video

சென்னை: யக்கா அஞ்சனா அக்கா இப்படி திடீர்னு ஒரு முடிவு எடுத்துவிட்டீர்களே என்று அவரின் ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.
சன் மியூசிக் சேனலில் 10 ஆண்டுகளாக விஜேவாக இருந்தவர் அஞ்சனா. சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கான விருது எல்லாம் வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் சன் மியூசிக் சேனலை விட்டு விலகிவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பிரேக் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
கவலை
அக்கா அஞ்சனா அக்கா நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்கள். உங்களை டிவியில் பார்த்தாலே மகிழ்ச்சி அடைவோம். இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டீர்களே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணியுள்ளனர்.
பிரேக்
உங்களுக்கு ஒரு பிரேக் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை எடுத்தற்கு பாராட்டுகள் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.
லேசு இல்ல
10 ஆண்டுகளாக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தது லேசான காரியம் அல்ல. உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவோம் அஞ்சனா என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அஞ்சனா
ரசிகர்கள் தன்னை மிஸ் பண்ணுவதாக ட்வீட் போடுவதை பார்த்து அஞ்சனா நெகிழ்ந்துள்ளார். மக்கா என் மீது இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களா என்று மகிழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











