ஆமா.. நீங்க அப்படியே செஞ்சுட்டாலும்.. ஒவ்வொரு சீசன்லேயும் இதை கேட்டு கேட்டு.. கமலை விளாசும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், கமலை விளாசியுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் கமல், சுரேஷ் சக்கரவர்த்தியையும் ரம்யா பாண்டியனையும் விளாச போவது போல் பேசுகிறார்.

இந்த புரமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் கடந்த சீசன்களில் அதிரடியாய் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ரசிகர்கள் கமலின் பில்டப்பையும் நம்பவில்லை என தெரிகிறது.

புரமோக்களில் மட்டும் கடுமை

புரமோக்களில் மட்டும் கடுமை

கடந்த சீசன்களில் கவினையோ அல்லது அதற்கு முந்தைய சீசன்களில் ஜூலி போன்று எரிச்சலை ஏற்படுத்திய, தவறு செய்த போட்டியாளர்களை கமல் கொஞ்சம் கூட கண்டிக்கவில்லை. புரமோக்களில் மட்டுமே கடுமை காட்டும் கமல், நிகழ்ச்சியில் பொறுமையாக தடவி கொடுத்து வருவார்.

நம்ப போவதில்லை

நம்ப போவதில்லை

கமலுக்கும் வலிக்காமல் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் வலிக்காமல் அடிப்பது போல பாவ்லா காட்டுவார். இதனை பார்த்து பார்த்து அலுத்து சலித்து ஏமாந்துப் போயுள்ளனர் ரசிகர்கள். இதனால் கமல் என்ன பில்டப் கொடுத்தாலும், நம்ப போவதில்லை என கூறியுள்ளனர்.

புரியவே மாட்டேங்குது?

புரியவே மாட்டேங்குது?

கமலின் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் படத்தில் பேசும் வசனம் புரியும்!!! ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும் பேச்சு தான் புரியவே மாட்டேங்குது! என கூறியுள்ளார்.

கமலுக்கு அட்வைஸ்

கமலுக்கு அட்வைஸ்

புரமோவை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல போய் எபிசொட்ஸ நல்லா பார்த்துட்டு வாங்க ஆண்டவரே ப்ரோமோ மட்டும் பாத்துட்டு வந்து பேசாதீங்க ஆண்டவரே.. என கமலுக்கு அட்வைஸ் கூறியுள்ளார்.

காதே புளிக்கிது..

காதே புளிக்கிது..

மற்றொரு நெட்டிசனான இவர், கமலின் புரமோவை பார்த்துவிட்டு இந்த பஞ்ச் ரொம்ப பழசு ஆண்டவரே! என மொக்கை செய்துள்ளார். மேலும் இந்த நெட்டிசன் ஒவ்வோரு சீசன்லேயும் இதைக் கேட்டு கேட்டு காதே புளிக்கிது.. என அலுப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

செயல்ல சறுக்குது..

செயல்ல சறுக்குது..

மற்றொரு நெட்டிசனான இவர், பஞ்ச் எல்லாம் பலமாகதான் இருக்கு ஆண்டவரே!. ஆனா செயல்ல சறுக்குது ஆண்டவரே! என புரமோவில் மட்டும் பஞ்ச் டயலாக்கை பேசி பில்டப் காட்டுவதாகவும் ஹவுஸ் மேட்ஸ்களிடம் எதுவும் பேச மட்டார் என்றும் மறைமுகமாக கூறியிருக்கிறார்.

நாலு சீசன் வந்துருச்சு

நாலு சீசன் வந்துருச்சு

இப்படி சொல்லி சொல்லியேதான் இப்ப நாலு சீசனே வந்துருச்சி நம்மவரே! என்று கூறியுள்ள இந்த நெட்டிசன் இதுவரை எதுவும் செய்யவில்லை என இன்டேக்ட்டாக விளாசியிருக்கிறார்.

ஒன்னும் புரியாது

ஒன்னும் புரியாது

இந்த நெட்டிசன், இங்க பேசுற இந்த பேச்சு... உள்ளேயும் போட்டியாளர்கள் முன்னாடி இப்படியே பேசனும்! அவங்க முன்னாடி இவரு பேசுறது நமக்கும் புரியாது.. அவங்களுக்கும் புரியாது.. என கமலை கிண்டலடித்துள்ளார்.

அப்படியே செஞ்சுட்டாலும்

அப்படியே செஞ்சுட்டாலும்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா நீங்க அப்படியே செஞ்சுட்டாலும்.. என கவுண்டமணியின் காமெடி போட்டோவை போட்டு கிண்டலடித்துள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர், ஒன்னும் செய்ய போறதில்ல சும்மா பில்ட் அப் மட்டும் தான் என சாடியிருக்கிறார்.

ஃபினிஷிங்தான் சரியில்லை

ஃபினிஷிங்தான் சரியில்லை

கமலின் இந்த புரமோவை பார்த்த இவர், ஓப்பனிங்லாம் நல்லா தான் இருக்கு ஆனா உங்க கிட்ட பினிஷிங் சரி இல்லையே ஆண்டவரே மூணு வருஷமா ப்ரோமோல பில்டப் மட்டும் தான் கொடுக்குறீங்க என கூறியுள்ளார்.

எப்போ முடிப்பீங்க

எப்போ முடிப்பீங்க

முதல் புரமோல நடக்க தொடங்குன நீங்க இரண்டாவது புரமோலயும் நடந்து கொண்டு இருக்கீங்களே.. மூன்றாவது புரமோவிலயாவது நடந்து முடிப்பீங்களா இல்ல அதுலயும் நடந்து கொண்டுதான் இருப்பீங்களா என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X