twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவில் இருந்து அமிதாப், ஐஸ்வர்யா ராய் குணமாகும் வரை சிறப்பு யாகம்.. ரசிகர்கள் அதிரடி முடிவு!

    By
    |

    கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் குடும்பத்தினர் குணமாகும் வரை, சிறப்பு யாகம் நடத்த அவரது ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளனர்.

    மும்பையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மகாராஷ்ட்ர அரசும் மும்பை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த கொரோனா வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

    டாட்டா, கிளம்பியாச்சு.. லாக்டவுனால் வெளிநாட்டில் 4 மாதமாக சிக்கிய பிரபல நடிகை.. பிளைட் பிடித்தார்! டாட்டா, கிளம்பியாச்சு.. லாக்டவுனால் வெளிநாட்டில் 4 மாதமாக சிக்கிய பிரபல நடிகை.. பிளைட் பிடித்தார்!

    நடிகர் அமிதாப் பச்சன்

    நடிகர் அமிதாப் பச்சன்

    பிரபல நடிகை ரேகாவின் வீட்டு செக்யூரிட்டிக்கு கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது பரபரப்பாகி இருந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை

    இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகளுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்தனர். அவர்களுக்கு அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்திருந்தார்.

    கொல்கத்தா ரசிகர்கள்

    கொல்கத்தா ரசிகர்கள்

    இதற்கிடையே அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட அவர் குடும்பத்தினர் குணமடைய கொல்கத்தா ரசிகர்கள், சிறப்பு யாகத்தை நடத்தி வருகின்றனர். இந்த யாகத்தை அவர்கள் குணமாகும் வரை நடத்த இருப்பதாக அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சஞ்சோய் படோடியா தெரிவித்துள்ளார். அவர் கோயிலில் இந்த யாகத்தை நடத்த முடிவு செய்திருக்கிறார்.

    Recommended Video

    Aishwarya Rai Bachchan &Daughter Aradhya Tested Positive
    லாக்டவுன் காரணமாக

    லாக்டவுன் காரணமாக

    'முதலில் அப்படி நினைத்தோம். ஆனால் மழை மற்றும் தண்ணீர் பல இடங்களில் தேங்கி இருப்பதால் கோயிலுக்கு அருகில் உள்ள எனது பிளாட்டில் இதை நடத்துகிறோம்' என்று தெரிவித்துள்ளார், சஞ்சோய் படோடியா. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இந்த யாகத்தைத் தொடங்கியுள்ளனர். லாக்டவுன் காரணமாகக் குறைவான நபர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

    English summary
    Fans of Amitabh Bachchan in Kolkata have organised "mahamritunjay yagna", which they said would continue till the Bollywood star and his family recover from COVID-19.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X