இன்னும் இரு தினங்களில் யுவன் பிறந்தநாள்.. இப்பவே காமன் டிபி வெளியிட்ட ரசிகர்கள்!

சென்னை : சர்வதேச அளவில் தன்னுடைய இசையால் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா. பியார் பிரேமா காதல், கொலையுதிர் காலம் முதற்கொண்டு, சமீபத்தில் வெளியான மாமனிதன் படம் வரை இவரது தயாரிப்பில் வெளியாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 31ம் தேதி இவர் தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி இவரது ரசிகர்கள் பல கொண்டாட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன்

இசையமைப்பாளர் யுவன்

கடந்த 1997ல் சரத்குமாரின் அரவிந்தன் படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. தற்போது திரையுலகில் இவர் தனது 25வது ஆண்டுக் கொண்டாட்டத்தில் உள்ளார். தன்னுடைய பாடல்களின்மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள இவர், சர்வதேச அளவில் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார்.

14 வயதில் இசைப்பயணம்

14 வயதில் இசைப்பயணம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் என்ற பின்புலத்துடன் இசையுலகில் காலடி வைத்திருந்தாலும் தனக்கென பிரத்யேகமான இசை மூலமே இவர் திரையுலகில் நீடிக்க முடிந்தது. தனது 14 வயதிலேயே தனது இசைப் பயணத்தை துவங்கிய இவர் 35 வயதிற்குள் 100 படங்களுக்கு இசையமைத்து முடித்துவிட்டார்.

இசை மீதான காதல்

இசை மீதான காதல்

தனது தந்தையை போலவே இவரும் முறையான இசை பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்ற போதிலும் இசையின் மீதான இவரது காதலே இவரை சிறப்பாக வழிநடத்தி வருகிறது. தன்னுடைய தாயின் மீது மிகுந்த பாசம் கொண்டவரான யுவன், அவருடைய பிறந்தநாளின்போது தன்னுடைய மகள் ஜியா பிறந்ததை பெருமையுடன் வெளிப்படுத்துவார்.

பல்வேறு விருதுகள்

பல்வேறு விருதுகள்

கடந்த 2006ம் ஆண்டில் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் தனது ராம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை பெற்றிருந்தார் யுவன். முன்னதாக 2004ம் ஆண்டில் 7ஜி ரெயின்போ காலனி படத்திற்காக பிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார் யுவன் சங்கர் ராஜா.

42வது பிறந்தநாள்

42வது பிறந்தநாள்

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி தன்னுடைய 42வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார் யுவன் சங்கர் ராஜா. இதையொட்டி இவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தற்போதே தயாராகி வருகின்றனர். இவரது பிறந்தநாளையொட்டி இப்போதே காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

காமன் டிபி வெளியீடு

காமன் டிபி வெளியீடு

இந்த டிபியின் யுவன் பாரம்பரியமாக வேட்டி சட்டையில் காணப்படுகிறார். கண்களில் கூலர்சுடன் கம்பீரமாக காணப்படுகிறார். மேலும் யுவனை சுற்றி பல இசைக்கருவிகள் மற்றும் மைக் உள்ளிட்டவையும் உள்ளன. எப்போதும் யுவனின் பிறந்தநாளை கட்அவுட் உள்ளிட்டவை கொண்டு சிறப்பாக கொண்டாடுவார்கள் அவரது ரசிகர்கள். அதுபோல இந்த ஆண்டும் முன்னதாகவே காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X