கொரோனா பாதித்த நடிகை தமன்னாவுக்குத் தீவிர சிகிச்சை.. விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை!

By

ஐதராபாத்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நடிகை தமன்னா, விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸால், உலகம் முழுவதும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

நிக்கி கல்ராணி

நிக்கி கல்ராணி

நடிகர் நடிகைகளும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அர்ஜுன் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா, நடிகை நிக்கி கல்ராணி, இயக்குனர் ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், விஷால் உள்பட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி மீண்டனர்.

பெற்றோருக்கு பாதிப்பு

பெற்றோருக்கு பாதிப்பு

இந்நிலையில் பிரபல நடிகை தமன்னாவின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடிகை தமன்னா சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். 'என் பெற்றோருக்கு கடந்த வாரம் இறுதியில் கொரோனா அறிகுறிகள் இருந்தன. பரிசோதனை செய்தோம். என் பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என்று கூறி இருந்தார்.

வெப் சீரிஸ் ஷூட்டிங்

வெப் சீரிஸ் ஷூட்டிங்

தனக்கும் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்று இல்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக நடிகை தமன்னா ஐதராபாத் வந்தார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.

 மருத்துவமனை

மருத்துவமனை

அதில் அவருக்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X