twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    PVR தியேட்டரில் பச்சைக் குதிரை விளையாடிய ரசிகர்கள்.. நெக்ஸ்ட் டைம் பாயோட வந்துடுவாங்க போல!

    |

    சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய மல்டி பிளக்ஸ் நிறுவனமான PVRல் எப்போதுமே 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகவே படம் போடுவது வாடிக்கை.

    Recommended Video

    PVR தியேட்டரில் பச்சைக் குதிரை விளையாடிய ரசிகர்கள்.. நெக்ஸ்ட் டைம் பாயோட வந்துடுவாங்க போல!

    அதுவே ஏகப்பட்ட ரசிகர்களை கடுப்பாக்கி வரும் சூழலில் விநாயகர் சதுர்த்தி அதுவுமா தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்து விட்டனர்.

    அதன் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்குள் செய்த அலப்பறை வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

    அழகான அம்சமான கெட்டப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட ஷிவானி.. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! அழகான அம்சமான கெட்டப்பால் ரசிகர்களை கட்டிப் போட்ட ஷிவானி.. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

    பிவிஆரில் பச்சைக் குதிரை

    பிவிஆரில் பச்சைக் குதிரை

    சென்னை விஆர் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டரில் ரசிகர்கள் சிலர் பச்சைக் குதிரை விளையாட்டை விளையாடிய வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்களை இந்த அளவுக்காக காக்க வைப்பீர்கள் என பிவிஆர் நிறுவனத்துக்கு எதிராக ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.

    எப்பவுமே லேட்

    எப்பவுமே லேட்

    மல்டிபிளக்ஸ் தியேட்டரில் 190 ரூபாய்க்கு மேல் டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சொன்ன நேரத்தில் எப்போதுமே படம் போடுவதில்லை. பிவிஆர் தியேட்டரில் படத்தை பார்க்க வேண்டுமென்றால் படம் போடப்படும் எனக் குறிப்பிட்ட நேரத்தை விட 15 நிமிடங்கள் தாமதமாக சென்றாலே படத்தை பார்க்கலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

    ஒரு மணி நேரம் தாமதம்

    ஒரு மணி நேரம் தாமதம்

    இந்நிலையில், அதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று படம் பார்க்க போனவர்களை சென்னை விஆர் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டர் ஆப்பரேட்டர்கள் சோதித்து விட்டனர். இதனால் கடுப்பான ரசிகர்கள் அங்கேயே பச்சைக் குதிரை விளையாடுவது, ஓடி பிடித்து விளையாடுவது என கைதட்டவும் சத்தமாக சிரிக்கவுமே யோசிக்கும் தியேட்டரில் பெரிய அலப்பறையே செய்து விட்டனர்.

    ரெஸ்பான்ஸ் செய்யாத ஊழியர்கள்

    ரெஸ்பான்ஸ் செய்யாத ஊழியர்கள்

    ஒரு மணி நேரமாக படம் ஏன் போடவில்லை என பலர் ஊழியர்களிடம் சண்டையும் பிடித்துள்ளனர். ஆனால், பண்டிகை நாளில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரசிகர்களின் கேள்விக்கு சரியான ரெஸ்பான்ஸ் கூட பிவிஆர் ஊழியர்கள் கொடுக்கவில்லை என ஏகப்பட்ட புகார்களும் கிளம்பி உள்ளன.

    ஓடிடி பக்கம்

    ஓடிடி பக்கம்

    இப்படி தியேட்டர்கள் ரசிகர்களை முறையாக கவனிக்கவில்லை என்றால் அவர்கள் தியேட்டர் பக்கமே வராமல் ஓடிடி பக்கம் சென்று விடுவார்கள் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு எச்சரித்து வருகின்றனர். ஏற்கனவே பாதி குடும்ப ஆடியன்ஸ் ஒரு மாசம் கழித்து வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு எப்போதோ வந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Fans playing high jump games at PVR Cinemas due to late screening and they complaint no supports and responses from PVR staffs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X