சோ ஸ்வீட் பேபி.. டாக்டர் ஹீரோயின் பிரியங்கா மோகனை கொஞ்சும் ரசிகர்கள்.. எல்லாம் சோ பேபி எஃபெக்ட்!

சென்னை: 3.5 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது டாக்டர் படத்தின் 'சோ பேபி' பாடல்.

காதல் பாடலாக உருவாகி உள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோவில் அனிருத், நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் செய்யும் அலப்பறைகளை தாண்டி பாடல் காட்சிகளில் வரும் நாயகி பிரியங்கா மோகன் கோலிவுட் இளைஞர்களை ஒரே பார்வையில் கவர்ந்து வருகிறார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் சோ பேபி பாடல் வீடியோவை ஷேர் செய்துள்ள பிரியங்கா மோகனை கொஞ்சி ஏகப்பட்ட கமெண்ட்டுகள் கொட்டியுள்ளன.

கன்னட படத்தில் அறிமுகம்

கன்னட படத்தில் அறிமுகம்

2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒந்து கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா அருள் மோகன். அதே ஆண்டு தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாரம் எனும் டோலிவுட் படத்திலும் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

கன்னடம் மற்றும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த பிரியங்கா மோகன், நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவும் மாறி உள்ளார். டாக்டர் படத்தின் சோ பேபி பாடலில் பிரியங்கா மோகனின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

டிரெடிஷனல் பியூட்டி

டிரெடிஷனல் பியூட்டி

சோ பேபி பாடல் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த நடிகை பிரியங்கா மோகனை கோலிவுட் ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர். டிரெடிஷனல் பியூட்டி என ஆரஞ்சு சேலை மற்றும் பிங்க் நிற ஜாக்கெட் அணிந்து நடனமாடும் பாவத்தை காட்டி நிற்கும் புகைப்படத்தை போட்டு வர்ணித்து வருகின்றனர்.

க்யூட் அழகி

க்யூட் அழகி

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் 26ம் தேதி டாக்டர் படம் திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு தற்போது யூடியூபில் வெளியாகி உள்ள சோ பேபி பாடல் 3.5 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. அந்த பாடல் காட்சியில் அழகாக இருக்கும் பிரியங்காவின் போட்டோக்களை ஷேர் செய்துள்ள இந்த ரசிகர் "யூ லுக்கிங் டேமன் க்யூட் அழகி" என ஜொள்ளு விட்டுள்ளார்.

சூப்பர் ஜோடி

சூப்பர் ஜோடி

கண்ணாடி போட்டுக் கொண்டு டாக்டர் லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயன் உடன் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு அழகாக நடந்து வரும் பிரியங்கா மோகனை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பரா இருக்கு என பதிவிட்டு வருகின்றனர். இயக்குநர் நெல்சன் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தளபதி 65 படம் பண்ண போற நிலையில் ஏகப்பட்ட விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்கு வெயிட்டிங்.

சோ ஸ்வீட் பேபி

சோ ஸ்வீட் பேபி

சமூக வலைதளங்களில் ஹோம்லி லுக்கில் செம க்யூட்டான போட்டோக்களை பதிவிட்டு வரும் பிரியங்கா மோகன் ரீசென்ட்டாக மஞ்சள் நிற உடையை அணிந்து டாப் ஆங்கிளில் பார்க்கும் வண்ணம் எடுத்த போட்டோவை ஷேர் செய்து பேபி என்றும் சோ ஸ்வீட் பேபி என்றும் ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

சூர்யா 40 அப்டேட்

சூர்யா 40 அப்டேட்

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை முடித்த கையோடு சூர்யாவின் 40வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை பிரியங்கா மோகன். சோ பேபி பாடல் காட்சிகளில் அவரை ரசித்த சூர்யா ரசிகர்கள், சூர்யா 40 அப்டேட் ஏதாவது கொடுங்க பிரியங்கா என கேட்க ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X