செதுக்கி வச்ச சிலையே.. ரெஜினா கஸன்ட்ராவை வர்ணிக்கும் ரசிகர்கள்!
சென்னை : இதுவரை அழகிய ராட்சசியாக வந்து ரசிகர்களை கிறங்க வைத்த ரெஜினா கஸன்ட்ரா நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பேயாக மிரட்டி இருப்பார்.
தன்னால் வில்லி கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து விஷாலின் சக்ராவில் ஸ்டைலிஷான வில்லியாக நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் ரெஜினாவை பின்பற்றும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்க இப்பொழுது பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செதுக்கி வச்ச சிலையே என வர்ணித்து வருகின்றனர்.

கண்ட நாள் முதல்
சிவகார்த்திகேயன், விமல் கலக்கல் காம்போ வில் பாண்டிராஜ் இயக்கத்தில் கலகலப்பான காமெடி திரைப்படமாக வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவருக்கும் பரிட்சயமான நடிகை ரெஜினா அதற்கு முன்பாகவே கண்ட நாள் முதல், அழகிய அசுரா உள்ளிட்ட படங்களில் சில காட்சிகளில் வந்திருப்பார்.

பேயாக நடித்து
திகட்டாத கவர்ச்சியை திரையில் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த இவர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாள் கிடப்பில் கிடந்து தற்பொழுது வெளியாகி சக்கைபோடு போட்ட நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பேயாக நடித்து அனைவரையும் மிரட்டியிருப்பார்.

நெகட்டிவ் ரோல்களில்
தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் இவருக்கு தெலுங்கில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர தமிழை காட்டிலும் தெலுங்கு திரைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் ஓவராகவே காட்டி தெலுங்கு தேசத்தில் கவர்ச்சி கன்னியாக உள்ள இவர் தற்போது நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

செதுக்கி வச்ச சிலையே
சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆச்சாரியாவில் முக்கிய ரோலில் நடித்து வரும் ரெஜினா கெஸன்ட்ரா தற்போது கைவசம் பார்ட்டி, கள்ளபார்ட், சிரஞ்சீவியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆச்சாரியாவில் முக்கிய ரோலில் நடித்து வரும் ரெஜினா தற்போது கைவசம் பார்ட்டி, கள்ளபார்ட், கசடதபற, சூர்ப்பனகை ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் ஜிகுஜிகு ஸ்லீவ்லெஸ் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை செதுக்கி வச்ச சிலையே என வர்ணித்து வருகின்றனர். கசடதபற, சூர்ப்பனகை ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில் ஜிகுஜிகு ஸ்லீவ்லெஸ் சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரை செதுக்கி வச்ச சிலையே என வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











