மக்கள் நலனில் அக்கறை காட்டும் அஜித்.. வலிமை பட ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் ரசிகர்கள் பாராட்டு!

சென்னை: அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த வலிமை படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் இதயமே நொறுங்கிப் போயுள்ளது.

ஆனலும், கொரோனா பரவல் அதிகரித்து வரும் இதுபோன்ற சூழலில் வலிமை படத்தின் ரிலீஸை நடிகர் அஜித் ஒத்தி வைக்க உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று என ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

எப்போதுமே ரசிகர்கள் மற்றும் மக்கள் நலனில் பெரும் அக்கறை காட்டுவது தான் நடிகர் அஜித்தின் அழகு என அஜித் ரசிகர்கள் #ValimaiPostponed ஹாஷ்டேக்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.

வலி கொடுக்கும் வலிமை

வலி கொடுக்கும் வலிமை

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் தான் வலிமை. வலிமை அப்டேட் கொடுங்க என்று உலக அரங்கே அதிரும் வகையில் ரசிகர்கள் தயாரிப்பு தரப்பை தாண்டி படத்திற்கான புரமோஷனை செய்தனர். ஆனால், இப்படியொரு அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.

மீண்டும் தள்ளிப் போனது

மீண்டும் தள்ளிப் போனது

கடந்த ஆண்டு சம்மருக்கு வலிமை திரைப்படம் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதி கட்ட காட்சிகள் படமாக்கப்படாத நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியான நிலையில், பொங்கலுக்கு வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.

அதிகரித்த கொரோனா

அதிகரித்த கொரோனா

பல நூறு கோடிகளில் உருவான பல படங்கள் வரும் பொங்கலுக்கு வெளியாக காத்திருந்த நிலையில், கொரோனா வைரஸின் அப்கிரேட் வெர்ஷன் ஓமிக்ரான் பரவலால் மீண்டும் லாக்டவுன் அறிவிப்புகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளன. திரையரங்குகள் முடக்கப்படாமல் 50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய படங்கள் வெளியாக காத்திருந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது தான் வலிமை உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸுக்கு வேட்டு வைத்தது.

மக்கள் நலனில் அக்கறை

மக்கள் நலனில் அக்கறை

கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அதிரடியாக உத்தரவிட்ட நடிகர் அஜித் ரசிகர்களின் சண்டையை தடுக்க தல என்கிற அடைமொழியையும் வேண்டாம் என நிராகரித்தார். இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு மக்கள் நலன் தான் முக்கியம் என நினைத்த நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க தயாரிப்பு தரப்புக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சோகத்திலும் ஒரு சந்தோஷம்

சோகத்திலும் ஒரு சந்தோஷம்

வலிமை படம் ஜனவரி 13ம் தேதி வியாழக் கிழமை வெளியானால் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமையே எதிர்பார்த்ததையும் தாண்டி அதிக வசூலை பெற்றுத் தர ரசிகர்கள் முன் வந்த நிலையில், ரசிகர்களின் உடல் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு நடிகர் அஜித் இப்படியொரு முடிவெடுத்திருப்பதை சோகத்திலும் ஒரு சந்தோஷத்துடன் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

50 சதவீதம் மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் சந்தித்து 100 சதவீத அனுமதியையும் கேட்கவில்லை. மற்ற படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகாமல் ஒதுங்கிய நிலையில், 1100 திரையரங்குகளையும் ஏற்கவில்லை அவர் தான் அஜித் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X