Leo trailer: சீரியல் கில்லரான சாண்டி.. லியோ டிரைலரை பார்த்து மிரண்டு போன பேன்ஸ்!

சென்னை: லியோ டிரைலரில் சீரியல் கில்லராக வரும் சாண்டியின் அட்டகாசமான நடிப்பைப் பார்த்து மிரண்டு போன பேன்ஸ் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் லியோ.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கில்லி படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இப்படத்தில் நினைத்து நடித்துள்ளனர்.

தளபதியின் லியோ: லியோ படத்திற்கு மக்கள் மத்தியில் பயங்கரமான எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில், படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக விஜய்யின் படம் என்றாலே ஹைப் அதிகமாக இருக்கும், அதுவும் லோகேஷ் கனகராஜ் என்பதால் படத்திற்கு ஹைப் மிக அதிகமாகவே உள்ளது.

லியோ டிரைலர்: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் இசைவெளியிட்டு விழா ரத்தானதால், ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தனர். இதனால், இவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று லியோ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. அதில், அடிதடி, வெட்டு குத்து என ஒரே ரத்தவாடை வீசினாலும் அவரது ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

Fans praises Dance master Sandy for playing a serial killer in Leo

மேலும், டிரைலரில் விஜய் பேசிய கெட்டவார்த்தை சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் விஜய் போன்ற பெரிய நடிகர் இதை தவிர்த்து இருக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து, விஜய்க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் கில்லர் சாண்டி: டான்ஸ் மாஸ்டர் சாண்டி, லியோ படத்தில் சைக்கோ த்ரில்லராக நடித்துள்ளார். நேற்று வெளியான டிரைலரில் சைக்கோவாக மாறிய சாண்டியின் அட்டகாசமான நடிப்பைப் பார்த்த ரசிகர்கள் வாயடைத்துப் போய் இணையத்தில் சாண்டியை கொண்டாடி வருகின்றனர். அந்த கேரக்டர் அவருக்கு பக்காவாக பொருந்தி உள்ளது.

Fans praises Dance master Sandy for playing a serial killer in Leo

திரையில் காத்திருக்கும் பேன்ஸ்: இந்நிலையில், படத்தின் கதாசிரியரான ரத்னா தனது சமூகவலைத்தளப்பத்தில், சாண்டியின் சீரியல் கில்லர் கதாபாத்திரத்தின் புகைப்படத்தை ஷேர் செய்து,பிக் பாஸில் சாண்டி மாஸ்டர் பெற்றிருந்த பெண் ரசிகைகளையும், குழந்தை ரசிகர்களையும் மிரட்டிவிடுவார் என தெரிகிறது என பதிவிட்டுள்ளார். டிரைலரைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் 19ந் தேதி படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X