நீங்கள்தான் பெஸ்ட் ஜோடி..இன்று இரண்டாவது திருமணம்.. திடீரென நாக சைதன்யா - சமந்தாவை புகழும் ரசிகர்கள்

சென்னை: சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு சில வருடங்கள் கழித்து அவர்கள் இருவரும் பிரிந்தார்கள். அவர்களது பிரிவுக்கு காரணம் திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்ததுதான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுகுறித்து சமந்தாவோ, நாக சைதன்யாவோ எந்தக் காரணத்தையும் சொல்லாமல் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று திருமணம் நடக்கவிருக்கிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனி இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதலித்தார். இருவருக்கும் வீட்டு சம்மதத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு சைதன்யாவும் சமந்தாவும் காதலோடு வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருந்தார்கள். மேலும் சமந்தாவும் தொடர்ந்து நடித்தார்.

naga chaitanya samantha

விவாகரத்து பெற்ற ஜோடி: சூழல் இப்படி இருக்க திடீரென சில வருடங்களுக்கு பிறகு நாங்கள் இருவரும் பிரிகிறோம் என்று தத்தமது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் இப்படி பிரிகிறார்களே என்று கோலிவுட்டும், டோலிவுட்டும் அதிர்ச்சியடைந்தது. அதற்கு காரணமாக பல யூகங்கள் சொல்லப்பட்டன. முக்கியமாக திருமணத்துக்கு பின்னரும் சமந்தா கிளாமராக நடித்ததுதான் காரணம் என்று ஒருதரப்பினர் சொன்னார்கள்.

நோய்தான் காரணமா?: இது ஒருபக்கம் இருக்க சமந்தாவுக்கு வந்த மையோசிடிஸ் நோய்தான் என்று மறுபக்கம் சொன்னார்கள். ஆனால் இரண்டு பேருமே அதுகுறித்து எந்தவிதமான பதிலையும் சொல்லாமல் அந்த விவகாரத்தை கடந்து போனார்கள். இதனையடுத்து சமந்தா தனக்கு வந்த நோயிலிருந்து மீள்வதற்காக சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டார். அதற்கு பிறகு மீண்டும் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன.


சிட்டாடல் ஹனி பன்னி: தற்போது அவர் மீண்டும் ஃபுல் ஃபார்மில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவர் சிட்டாடல் ஹனி பன்னி என்ற வெப் சீரிஸில் அட்டகாசமாக நடித்திருப்பதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். மேலும் சில படங்களில் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சமந்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

புகழும் ரசிகர்கள்: அதேசமயம் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். அவர்களது திருமணம் இன்று நடக்கவிருக்கிறது. ஹைதராபாத்தில் இருக்கும் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இத்திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் நாக சைதன்யா - சமந்தாவை ரசிகர்கள் புகழ ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது சமந்தாவும், நாக சைதன்யாவும் மஜிலி என்ற படத்தில் நடித்திருந்தார்கள். அந்தப் படத்தின் போஸ்டரை சைதன்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார்.

ஆனால் இரண்டு பேரும் பிரிந்த பிறகு சமந்தாவின் புகைப்படங்கள் அனைத்தையும் நாக சைதன்யா நீக்கிவிட்டார். இருப்பினும் இந்தப் போஸ்டரை மட்டும் இன்னமும் அவர் நீக்கவில்லை. இன்று அவருக்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருக்கும் சூழலில் அந்தப் போஸ்டரில் கமெண்ட் செக்‌ஷனில் சென்று; 'நீங்களும் சமந்தாவும்தான் சிறந்த ஜோடி’ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X