சிவகார்த்திகேயன் மனசே மனசுதான்.. ஜெயம் ரவிக்கு கொடுத்த மரியாதையை பாருங்களேன்

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அந்தப் படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்புதான் நடந்தது. இந்தப் படத்தில் பிரச்னை என்று தகவல்கள் வெளியான சூழலில் பூஜை நடந்திருப்பது எஸ்கேவின் ரசிகர்களிடம் உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சிவாவின் செயல் ஒன்று ரசிகர்களை நெகிழ செய்திருக்கிறது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் அவரது திரையுலக வாழ்க்கையையே புரட்டி போட்டிருக்கிறது. அவரது படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்த சூழலில் அமரன் திரைப்படமோ 350 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக அவரது மார்க்கெட் உச்சம் சென்றிருக்கிறது. முக்கியமாக பான் இந்தியா அளவில் சிவாவின் அமரன் பயங்கர ஹிட்டடித்திருப்பதால்; இந்திய அளவில் அறியப்படும் ஹீரோவாகவும் மாறிவிட்டார் அவர்.

sivakarthikeyan jayam ravi

அடுத்த விஜய்: GOAT படத்தில் சிவாவிடம் விஜய் துப்பாக்கி கொடுப்பது போன்ற சீன் இருக்கும். அமரன் வெற்றி அந்த சீனை நிஜமாக்கிவிட்டதாகவும்; கோலிவுட்டின் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் மட்டும்தான் என்றும் பலர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பிலும் தன்னை பிஸியாக வைத்திருக்கும் அவர்; ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படமும் சிவாவின் கரியரில் முக்கியமானதாக அமையும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

புறநானூறு: இதற்கிடையே சூரரைப் போற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா சூர்யா, துல்கர் சல்மான் உள்ளிட்டோரை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் ஹிந்தியில் சூர்யாவின் கவனம் முழுவதுமாக சென்றிருப்பதால்; இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கும் சுதாவுக்குமிடையே மனஸ்தாபம் வந்துவிட்டதாக கூறப்பட்ட சூழலில்; புறநானூறு படத்திலிருந்து சத்தமே இல்லாமல் வெளியேறினார் சூர்யா.

சிவகார்த்திகேயன்: அவர் வெளியேறியதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இந்தப் படத்துக்குள் வந்தார். ஆனால் அவருக்கும், சுதாவுக்குமேகூட சண்டை வந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் தீயாக பரவியது. ஆனால் அதிலெல்லாம் உண்மை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தப் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. அதை பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தனர். கண்டிப்பாக இந்தப் படமும் அவருக்கு மெகா ஹிட்டாகும் என்று எஸ்கே ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஜெயம் ரவிக்கு செய்த மரியாதை: இந்தப் படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஜெயம் ரவி இதில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூஜையில் சிவகார்த்திகேயன் செய்த ஒரு செயல் அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது பூஜையில் வைக்கப்பட்ட பேனரில் முதலில் ஜெயம் ரவி பெயர்தான் இருந்தது. அதற்கு பிறகுதான் சிவகார்த்திகேயனின் பெயர் இருந்தது.

இதனை கவனித்த ரசிகர்கள்; சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு பெரிய மனது. இப்போது தான் மார்க்கெட்டில் டாப்பாக இருந்தாலும் தன்னுடைய சீனியர் ஹீரோவுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் எஸ்கே மென்மேலும் வளர்ந்துகொண்டே செல்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X