இப்படியெல்லாம் பேச உங்களால மட்டும்தான் முடியும்.. வனிதாவின் டிவிட்டை பார்த்து பிரமிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை வனிதாவின் டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் இப்படியெல்லாம் பேச உங்களால் மட்டும்தான் முடியும் என கூறியுள்ளனர்.
Recommended Video
நடிகை வனிதாவின் கணவரான பீட்டர் பால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.

கணிக்கவே முடியாது
அவர் மருத்துவமனையில் இருந்தபோதே உருக்கமாக பதிவிட்டிருந்தார் நடிகை வனிதா. கடவுளுக்கு என்டெர்டெய்ன்மென்ட் தேவைப்படுகிறது. அதனால்தான் என்னுடன் விளையாடுகிறார். எவருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கும், வாழ்க்கையை கணிக்கவே முடியாது என்று கூறியிருந்தார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி
அவரது பதிவுகளை பார்த்த ரசிகர்கள் வனிதாவுக்கு ஆறுதலும் தைரியமும் தெரிவித்தனர். பின்னர் எல்லாம் நன்மைக்கே.. வீட்டிற்கு வந்துவிட்டோம் என மகிழ்ச்சியாக ஒரு டிவிட்டை பதிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்களும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது முடிவு அல்ல
இந்நிலையில் நடிகை வனிதா இன்று ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில் போய்க்கொண்டே இருங்கள்.. நாம் உருவாக்குவதுதான் வாழ்க்கை.. நான் இந்த அட்வெஞ்சர்களை என்ஜாய் செய்கிறேன்.. அது முடிவு அல்ல .. நீண்ட தூரம் செல்ல வேண்டும் .. தொடர்ந்து செல்லலாம் என பதிவிட்டுள்ளார்.

திரும்பி பார்க்காதீர்கள்
இதனை பார்த்த நெட்டிசன்கள் எந்த மாதிரி நேரத்திலும் ஸ்போர்ட்டிவாக பேச உங்களால்தான் முடியும், இதுதான் உங்களிடம் எங்களுக்கு பிடித்தது என பாராட்டியுள்ளனர். சிலர், எதையும் திரும்பி பார்க்காதீர்கள்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











