நினைத்ததை எதார்த்தமாக கொடுத்திருக்கிறார்.. பாராட்டு மழையில் இயக்குநர்.. 'மாயநதி' யின் போக்கு அழகு!

Recommended Video

Maayanadhi Tamil Movie | Abi Saravanan | Venba | Adukalam Naren

சென்னை: மாயநதி படம் நேற்று வெளியான நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குநரை பாராட்டி வருகின்றனர்.

அபி சரவணன்- வெண்பா நடிப்பில் நேற்று வெளியான படம் மாயநதி. இந்தப் படத்தை மருத்துவரான அசோக் தியாகராஜன் இயக்கி தயாரித்துள்ளார்.

பிளஸ் 2 படிக்கும் வெண்பாவிற்கு ஆட்டோ டிரைவராக வருகிறார் நாயகன் அபி சரவணன். பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்ற மாணவி, 12ஆம் வகுப்பிலும் வகுப்பில் முதல் மாணவியாக உள்ளார்.

புரட்டி போடும் காதல்

புரட்டி போடும் காதல்

டாக்டராக வேண்டும் என்ற லட்சத்தியத்துடன் உள்ள மாணவி வெண்பாவுக்கும் அபி சரவணனுக்கும் இடையே காதல் மலருகிறது. இதனால் படிப்பில் தடுமாற, மனதை மாற்றிய காதலனை திருமணம் செய்கிறார். அதன்பிறகு அவர் படும்பாடுதான் படம். பள்ளிப் பருவத்தில் அந்த அறியா காதல் ஒரு மாணவியின் வாழ்க்கையை எப்படி புரட்டி போட்டு விடுகிறது என்பதுதான் படம்.

உணர்ச்சிபூர்வமான நடிப்பு

உணர்ச்சிபூர்வமான நடிப்பு

இதனை எதார்த்தமாக கூறியிருக்கிறார் இயக்குநர் அசோக் தியாகராஜன். படத்தில் எந்த பில்டப்பும் இல்லாமல் ஸ்மூத்தாக மாயநதியை கொண்டு சென்றிருக்கிறார்.மகள் மீது மிகுந்த பாசம் கொண்ட அப்பாவி அப்பாவாக தனது அனுபவ நடிப்பை காட்டியிருக்கிறார் நரேன். இதேபோல் நடிகர் அப்புக்குட்டியும் தனது உணர்ச்சிபூர்வமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு தூண்

படத்திற்கு தூண்

படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பாக்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் என கூறியிருக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளரான ராஜா பவதாரினி, படத்திற்கு மிக பெரிய தூணாக தாங்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரவித்துள்ளனர். பல இடங்களில் பவதாரினி தனது அப்பாவை ஞாபகப்படுத்தும் வகையில் இசையமைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

தனது வாழ்க்கையில் சந்தித்த ஒரு உண்மை சம்பவத்தை இயக்குநர் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. தான் இயக்கும் முதல் படம் என்ற சுவடே தெரியாத அளவுக்கு இயக்குநர் உள்ளதை உள்ளபடி எதார்த்தமாய் கொண்டு சென்றிருப்பதாய் படத்தை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குழந்தைகள் நல மருத்துவரான அசோக் தியாகராஜன் சினிமா மீது கொண்ட காதலால் இந்த படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X