திடீர் மாரடைப்பு.. நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி.. நலம்பெற வேண்டுதல்!

சென்னை: நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

#BREAKING நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு!

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக்.

இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் ரஜினி, அஜித் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் விவேக்.

சின்னக்கலைவாணர்

சின்னக்கலைவாணர்

நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். விவேக்கின் தனித்துவமான நகைச்சுவைக்ளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சின்னக் கலைவாணர்

சின்னக் கலைவாணர்

சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லும் அவரது நகைச்சுவைகளுக்காக சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார் விவேக். மரம் நடுவது இயற்கையை பாதுகாப்பது என அப்துல் கலாம் வழியில் செல்லும் நடிகர் விவேக் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐசியூவில் சிகிச்சை

ஐசியூவில் சிகிச்சை

நடிகர் விவேக்குக்கு ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நடிகர் விவேக்குக்கு மூச்சு திணறலும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நலம்பெற வேண்டும்

நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த ரசிகர் விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் சார் என பதிவிட்டுள்ளார்.

தீவிரமாக முயற்சித்தவர்

டாக்டர் அப்துல் கலாமின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என தீவிர முயற்சி செய்தவர், விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

இந்திய அளவில் ட்ரென்டிங்

இந்திய அளவில் ட்ரென்டிங்

மேலும் "Get Well Soon Sir" என்ற ஹேஷ்டேக்கில் விவேக் நலம் பெறவேண்டி ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த "Get Well Soon Sir" இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது.

More from Filmibeat

Read more about: vivek விவேக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X