அட.. சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட நடிகர் யோகி பாபுவுக்கு ரசிகர்கள் கொடுத்த கிஃப்ட்ட பாருங்க!
Recommended Video
சென்னை: திடீரென திருமணம் செய்து கொண்ட நடிகர் யோகி பாபுவுக்கு அவரது ரசிகர்கள் கல்யாண பரிசு ஒன்றை அளித்திருக்கின்றனர்.
நடிகர் யோகி பாபு ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகர் யோகி பாபு.
அவரது நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, முத்தின கத்தரிக்காய், வேதாளம், மெட்ரோ, ஜாக்சன் துரை, சர்கார், காக்கிச்சட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் பிஸியாக உள்ளார்.

எப்போது திருமணம்
அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. அவர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தொகுப்பாளர்கள் கேட்கும் முதல் கேள்வி எப்போது கல்யாணம் என்பது தான். ஏன்.. தர்பார் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் அதே கேள்வியைதான் கேட்டனர் தொகுப்பாளர்கள்.

துணை நடிகை
இதனால் நொந்துப் போன யோகி பாபு இதுதான் இப்ப நாட்டுக்கு ரொம்ப முக்கியமா என்று பதில் கேள்வி கேட்டு திணறடித்தார். மேலும் விரைவில் திருமணம் நடைபெறும் என ரஜினி சாரே கூறியிருக்கிறார் என்றார். அப்போதுதான் துணை நடிகை ஒருவருடன் யோகி பாபு இருக்கும் போட்டோ வெளியானது.

திருமணம்
அவர்தான் யோகி பாபுவின் மனைவி என்றும் தகவல் பரவியது. ஆனால் அதனை மறுத்த யோகி பாபு, அது வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற போவதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்தது. ஆனால் அதனையும் மறுத்த யோகி பாபு பிடிகொடுக்காமல் பேசினார்.

குலதெய்வ கோவிலில்
இந்நிலையில் வெளியான தகவலின்படியே கடந்த 5ஆம் தேதி காலை திடீரென திருமணம் நடைபெற்றது. திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார். சென்னையில் அடுத்த மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
கல்யாண பரிசு
இல்லை இல்லை என்று சொல்லிவிட்டு இப்படி திடுதிப்பென்று திருமணம் செய்துகொண்டு வந்து நிற்கிறாரே என்று ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். யோகி பாபும் மஞ்சு பார்கவியும் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களும் வைரலானது. இந்நிலையில் யோகி பாபுவை நேரில் சந்தித்த அவரது ரசிகர்கள் யோகி பாபு தனது மனைவியுடன் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோவை ஃபிரேம் செய்து கொடுத்திருக்கின்றனர். இதனை யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்


Click it and Unblock the Notifications











