அட இது கூட நல்லா இருக்கே...மாரி செல்வராஜிற்கு ரசிகர்கள் கொடுத்த செம ஐடியா

சென்னை : இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மானின் சந்திப்பு பற்றி டைரக்டர் மாரி செல்வராஜ் போட்ட ட்வீட்டிற்கு ரசிகர்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகள் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது. அடடே இது கூட நல்லா இருக்கே என பலரும் அதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

துபாயில் இசை கச்சேரிக்கு சென்ற இளையராஜா, அங்குள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். இந்த போட்டோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்த இசை பிரியர்கள் சந்தோஷத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த போட்டோவை பிரபலங்கள் பலரும் பாராட்டி, லைக் செய்துள்ளனர்.

வேற என்ன வேணும்

வேற என்ன வேணும்

இந்நிலையில் டைரக்டர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு போட்டோவை ரீ ட்வீட் செய்ததுடன், வேற என்ன "வாழ்வின் முழு பகுதி" என கருத்து பதிவிட்டுள்ளார். ஆனால் ரசிகர்களோ மாரி செல்வராஜிடம் யாரும் எதிர்பார்க்காத புதிய கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இது இசை பிரியர்களை வேற லெவலில் கொண்டாட வைத்துள்ளது.

அடடே இது கூட நல்லா இருக்கே

அடடே இது கூட நல்லா இருக்கே

மாரி செல்வராஜின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், நீங்கள் இயக்கும் மாமன்னன் படத்தில் இசைப்புயல் இசையில்,மேஸ்ட்ரோ குரல் கொடுத்தால் எப்படி இருக்கும். என் ரெண்டு தலைவன சேர்த்த பெருமை உங்களை சேரும். ரெண்டு பேரையும் உங்க படத்திற்கு புக் பண்ண வேண்டியது தான தல. அப்படி நடந்தால் அது வேற லெவல் காம்போவாக இருக்கும் என கேட்டுள்ளனர். இதை பார்த்த மற்றவர்களும் அடடே இது கூட நல்லா இருக்கே என ஆதரவு தெரிவிக்க துவங்கி விட்டனர்.

மாமன்னன் படத்தில் பிஸி

மாமன்னன் படத்தில் பிஸி

டைரக்டர் ராமிடம் அசிஸ்டென்டாக இருந்த மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே பெரிய அளவில் பேசப்பட்டதால், இரண்டாவதாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். அந்த படமும் கொரோனா சமயத்தில் தியேட்டர்களில் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்தது. தனது மூன்றாவது படைப்பாக மாமன்னன் என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ்.

Recommended Video

Thanu Sirஇன் தியாகம் அதிகம் | Mari Selvaraj Talk | FILMIBEAT TAMIL
வைகை புயலும் இருக்காரே

வைகை புயலும் இருக்காரே

உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடித்து வரும் மாமன்னன் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டள்ளது. கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடியை மையமாகக் கொண்ட படம் ஒன்றை மாரி செல்வராஜ் இயக்க போவதாக கூறினார்கள். ஆனால் தற்போது மாமன்னன் படத்தின் வேலைகளை மாரி செல்வராஜ் துவக்கி உள்ளதால், இந்த படம் முடிவடைந்த பிறகே துருவ் விக்ரம் உடனான படத்தின் வேலைகளை துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X