காலா.. இதைக் கவனிக்கலையா நீங்க? - ரசிகர்கள் எழுப்பும் கேள்வி!

By Vignesh Selvaraj

Recommended Video

காலா டீஸர் பற்றிய ஒரு அலசல் : #kaalateaser

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

வெளியானது முதலே, செம ட்ரென்டிங்கில் இருக்கும் 'காலா' டீசரை பற்றித்தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ரஜினி பேசியிருக்கும் வசனம் செம வைரலாகி வருகிறது.

இந்நிலையில், காலா ஃபர்ஸ்ட் லுக்கில் வெளியிட்ட ஜீப் எண்ணும், டீசரில் வரும் ஜீப் எண்ணும் மாறியிருப்பது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

'காலா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. செம மாஸான இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை உற்சாகமாக்கியது. அதில் ரஜினி ஜீப் மீது அமர்ந்திருந்தார். பின்புறம் குப்பத்தின் காட்சி காணப்பட்டது.

ஜீப் நம்பர்

ஜீப் நம்பர்

ரஜினி அமர்ந்திருந்த ஜீப்பின் எண் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. அதாவது ஜீப் எண் MH 01 BR 1956 என்று இருந்தது. அதில் BR என்பது பி.ஆர்.அம்பேத்கரை குறிக்கிறது. அதேபோல் 1956 என்பது அம்பேத்கர் புத்த மதத்தை தழுவி, மரணித்த ஆண்டை குறிக்கிறது.

குறியீடுகள்

குறியீடுகள்

இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ரஜினி வழியாக ரஞ்சித் வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டது. ரஞ்சித் படங்களில் இருக்கும் அரசியல் குறியீடுகள் எப்போதுமே ஆய்வுக்குள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீப் நம்பர் மாற்றம்

ஜீப் நம்பர் மாற்றம்

இந்நிலையில் இன்று காலா படத்தின் டீசர் வெளியானது. டீசரில் குறியீடுகள் காட்டியிருப்பார் என ரசிகர்கள் விடாமல் தேடினர். டீசரில் வரும் ரஜினியின் ஜீப் எண் மாறியுள்ளது. அதாவது MH 09 PR 1931 என்று இடம்பெற்றுள்ளது.

ரசிகர்கள் கேள்வி

இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்று சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், டீசரில் ரஜினிக்கு பின்புறமாக இருக்கும் ஜீப், அதே மஹிந்திரா மாடலாக இருந்தாலும், அவரை அடிக்க வந்தவர்களுடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X