சங்கீதா விஜய், ஜேசன் சஞ்சய் ஜனநாயகன் இசை வெளியீட்டுக்கு ஏன் வரல?.. அவசியம் இல்லை.. பிரபலம் ஓபன்
சென்னை: விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படம் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஹெச்.வினோத் படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. அதில் விஜய்யின் தாயும், தந்தையும் கலந்துகொண்டார்கள். ஆனால் மனைவியும், மகன் மற்றும் மகள் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.
விஜய்க்கும், சங்கீதாவுக்கும் இடையே கடந்த 1999ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு ரசிகையை விஜய்யை பார்க்க வந்த சங்கீதாவை; விஜய்யின் தந்தைக்கும், தாயுக்கும் பிடித்துப்போக; விஜய்யிடம் கேட்டார்கள். விஜய்க்கும் சங்கீதாவை பிடித்ததன் காரணமாக உடனடியாக திருமணத்தை நடத்தி வைத்தார்கள். அந்தத் தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். மகன் போக்கிரி, வேட்டைக்காரன் படங்களில் தலை காண்பித்திருந்தார். இப்போது சிக்மா படத்தை இயக்கியிருக்கிறார். மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருந்தார்.
ஃபேவரைட் ஜோடி: விஜய்யும், சங்கீதாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வருகிறார்கள். சில வருடங்களுக்கு முன்புவரை விஜய்யின் பட இசை வெளியீட்டு விழாவுக்கும், இதர சினிமா தொடர்பான விழாக்களுக்கும் விஜய்யோடு தவறாமல் ஆஜராகிவிடுவார் சங்கீதா. நண்பன் இசை வெளியீட்டு விழாவில், 'விஜய்க்கு ஜெனிலியாவுடனான ஜோடி பொருத்தம்தான் நன்றாக இருக்கும்' என்றெல்லாம் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இப்போது மிஸ்ஸிங்: ஆனால் சமீப காலமாக சங்கீதாவை விஜய் பட நிகழ்ச்சிகள் எதிலுமே காண முடிவதில்லை. இரண்டு பேருக்கும் ஓடும் பிரச்னையால்தான் சங்கீதா வருவதில்லை என்றும்; அவர் இப்போது இந்தியாவிலேயே இல்லை. லண்டனில் தனது பெற்றோருடன் வசித்துவருகிறார். தனது மகன் மற்றும் மகளையும் தன்னுடன் அழைத்து சென்றுவிட்டார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்புகின்றன. அதேசமயம் அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனது விஜய் ஆதரவாளர்களின் கருத்து.
ரொம்ப எதிர்பார்த்த ரசிகர்கள்: சில வருடங்களாகவே இந்தப் பேச்சு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் தந்தையும், தாயும் கலந்துகொண்டார்கள். சங்கீதாவும், மகனும், மகளும் கலந்துகொள்வார்கள் என்று ரொம்பவே எதிர்பார்த்தார்கள் ரசிகர்க்ள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் பற்றி பேசியிருக்கிறார்.
அந்தணன் பேட்டி: அவர் அளித்த அந்தப் பேட்டியில், "சங்கீதா நீண்ட காலமாக எதற்குமே வருவதில்லை. அதேமாதிரி தங்கள் பட விழாக்களுக்கு எல்லா நடிகர்களும் அவர்களது குடும்பத்தை அழைத்து வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது ஏன் விஜய்யை மட்டும் குறிப்பிட்டு கேட்கிறார்கள் என புரியவில்லை. இதில் குதர்க்கமான விஷயமும் இருக்கிறது. ஒரு குடும்பத்தை சூட்கேஸ் மாதிரி போகிற இடமெல்லாம் தூக்கி செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரியாது. ஏன் வருவதில்லை என்பதை சங்கீதாவிடம்தான் கேட்க வேண்டும். ஆனால் ஒன்று விஜய்யுடன்தான் அவருடைய மனைவியும், மகனும், மகளும் இருக்கிறார்கள். அனைவருமே நீலாங்கரை வீட்டில்தான் இருக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











