ரோபோ சங்கரின் மகளின் ஆசை இதுதான்.. நிறைவேற்றுவாரா மருமகன்?.. அவர் சொன்னதை கேளுங்க

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் ரோபோ சங்கர். அவரை சினிமாவில் தனுஷ் அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே தனது நல்ல நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார். இதற்கிடையே ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது. அவருக்கு விரைவில் குழந்தை பெறவிருக்கிறது.

சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்தவர் ரோபோ சங்கர். டிவி ஷோக்களில் அவர் செய்த காமெடிகள் பலமாகவே எடுபட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு மக்களின் மனதில் எளிதாக சென்று சேர்ந்தார். அவரது திறமையை கண்டுகொண்ட தனுஷ் சிவகார்த்திகேயனை போலவே ரோபோ சங்கரையும் சினிமாவுக்குள் அழைத்து வந்தார். முதலில் தனுஷுடன் மாரி படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் சனிக்கிழமை என்ற கேரக்டரை மிக அழகாக செய்திருந்தார்.

robo shankar indraja

வரிசையாக வாய்ப்புகள்: மாரி படத்தில் ரோபோ சங்கரின் பெர்ஃபார்மென்ஸ் கோலிவுட்டில் படைப்பாளிகளின் கவனத்தை ஈர்த்தது. அதனையடுத்து அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சங்கர் படிப்படியாக முன்னேறினார். அதன்படி விஜய், அஜித் உள்ளிட்டோருடன் நடித்தார். இப்போதும் அவரது கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. படங்களில் நடிப்பது தவிர்த்து சில ஷோக்களில் நடுவராகவும் இருக்கிறார்.

மகளும் நடிகை: இதற்கிடையே ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் இருக்கிறார். அவர் பிகில் படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்திலும் நடித்தார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் இந்திரஜாவின் நடிப்பு பலராலும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

திருமணம்: சூழல் இப்படி இருக்க அவருக்கும் கார்த்திக் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. அந்தத் திருமணம் மதுரையில் நடந்தது. அதனையடுத்து ரிசப்ஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டார். அந்த ரிசப்ஷனில்தான் ரோபோ ஷங்கரின் மனைவிக்கு கார்த்திக் உதட்டில் முத்தம் கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்க இந்திரஜா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தனது ஆசையை தெரிவித்திருக்கிறார் இந்திரஜா.

என்ன ஆசை?: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கு பிரசவம் நடக்கும்போது பிரசவ அறையில் இவரும் இருக்க வேண்டும் என்று மருத்துவரிடம் அனுமதி வாங்கிவிட்டேன். அதுதான் எனது ஆசையும்" என்று இந்திரஜா குறிப்பிட்டார். அதற்கு கார்த்திக்கோ, "எனக்கு அந்த அளவுக்கெல்லாம் தைரியம் இல்லை. டெஸ்ட் கிட்டை இந்திரஜா என்னிடம் கொடுத்தபோதே அழுதுவிட்டேன். இதில் பிரசவ அறைக்குள் நான் சென்று எப்படி சமாளிக்கப்போகிறேனோ" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X