அவசர அவசரமாக 2வது திருமணம்.. மாதம்பட்டி ரங்கராஜை சுற்றி என்னதான் நடக்கிறது?.. அய்யோ அந்த மேட்டர்!

சென்னை: கோலிவுட்டில் கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். தனது முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து விவாகரத்து பெறாத அவர்; ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அதுதொடர்பான புகைப்படத்தை கிரிஸில்டா பகிர்ந்தாலும்; ரங்கராஜ் இதுவரை எதையும் கூறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் பலவிதமாக கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.

நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் முதலில் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். ஸ்ருதி ஒரு வழக்கறிஞர் ஆவார். மேலும் ஒரு கட்சியின் மகளிர் அணி நிர்வாகியாகவும் இருந்துவருகிறார். இந்த ஜோடி தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தது. தங்களுக்கிடையே உள்ள மகிழ்ச்சியான தருணங்களை எல்லாம் ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வழியே வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்.

மனஸ்தாபம்: ஆனால் கடந்த சில காலமாக அவர்கள் இரண்டு பேருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது. காலப்போக்கில் அந்த விரிசல் குறையும் என்றுதான் குடும்பத்தினர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது மேற்கொண்டு பெரிதானது. இது ஒருபக்கம் இருக்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர்.

யார் இந்த ஜாய் கிரிஸில்டா?: அவர் ஜில்லா, மிருதன், வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மேலும் ஜோதிகாவை வைத்து பொன்மகள் வந்தாள் படத்தை இயக்கிய ஜே.ஜே.ப்ரெட்ரிக்கை திருமணமும் செய்திருந்தார். அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Fans question why Madhampatty Rangaraj who has married for the second time has not spoken out yet
Photo Credit:

இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரங்கராஜுக்கும், கிரிஸில்டாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறிவிட்டது என்றும்; விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள் எனவும் பலரும் தொடர்ந்து கூறிவந்தார்கள். அவர்கள் கூறியபடியே இரண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படத்தையும் ஜாய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கர்ப்பம் டூ நோ டைவர்ஸ்: இரண்டாவது திருமணம் செய்துகொள்வது அவரவர் விருப்பம்தான் என்றாலும்; இந்தத் திருமணம் வேறு வகையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஸ்ருதியிடமிருந்து இன்னும் ரங்கராஜ் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. அதேபோல் ஜாய் கிரிஸில்டாவும் ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அதனை அவரே அறிவிக்கவும் செய்திருக்கிறார். இவையெல்லாம் சேர்ந்துதான் இத்திருமணத்தை சர்ச்சை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது.

என்னதான் நடக்குது?: இந்நிலையில் இத்திருமணம் குறித்தோ, வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறித்தோ ரங்கராஜ் இதுவரை எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். இது ஒருபக்கம் இருக்க; இரண்டு பேரும் பழகியதில் கிரிஸில்டா கர்ப்பம் ஆகிவிட்டார். அந்த நிர்பந்தத்தில்தான் அவரை அவசர அவசரமாக மாதம்பட்டியார் திருமணம் செய்திருக்கிறார்; அதுமட்டுமின்றி சமீபமாகவே இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றிவிட்டது.

அதுமட்டுமின்றி இந்தப் புகைப்படங்களை கிரிஸில்டா வெளியிட்டதை ரங்கராஜ் விரும்பவில்லை. அதன் காரணமாகத்தான் இதுவரை அந்தப் படங்களை ஷேர் செய்யாமலும், கருத்து எதுவும் சொல்லாமலும் இருக்கிறார் என பல பேச்சுக்கள் ரசிகர்களிடையே எழுந்திருக்கின்றன. முக்கியமாக இப்படியே சைலெண்ட்டாக இருந்தாலும் இத்திருமண விவகாரம் நாளுக்கு நாள் சர்ச்சை வளையத்துக்குள்ளேயே சிக்கிவிடும். எனவே உடனடியாக அவர் தனது மௌனத்தை கலைக்க வேண்டும். அவரை சுற்றி என்னதான் நடக்கிறதோ என்று ஓபனாகவே பேச்சுக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. மௌனம் கலைப்பாரா மாதம்பட்டியார்.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X