மனோஜ் பாரதிராஜாவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவிக்கவில்லையே.. எந்திரன் படத்தில் உழைத்திருக்கிறாரே

சென்னை: மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அவர் காலமான செய்தி வெளியானதில் இருந்தே பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து வருகின்றனர். பாரதிராஜாவின் 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் போன்ற பல படங்களில் நடித்த கமல்ஹாசன் நேற்று இரவே ட்வீட் மூலம் இரங்கல் தெரிவித்தார். ஆனால், அவர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை.

பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் பாரதிராஜா இயக்கத்தில் கொடி பறக்குது படத்திலும் நடித்துள்ளார். ஆனால், இயக்குநர் இமயத்தின் மகன் உயிரிழந்த செய்தி கேட்டு ஒரு இரங்கல் ட்வீட் கூட ஏன் போடவில்லை என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

Fans raised Why Actor Rajinikanth didn t put a condolence tweet to Manoj Bharathiraja demise

நடிகர் ரஜினிகாந்த் ஷங்கர் இயகக்த்தில் நடித்த எந்திரன் படத்தில் ஷங்கரின் உதவி இயக்குநராகவும் ரஜினிக்கு ரோபோ மற்றும் வசீகரன் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

முதல் ஆளாக வரும் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் மரணத்திற்கு முதல் ஆளாக அதிகாலையிலேயே வந்து நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருப்பதை பார்த்திருப்போம். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட பொருட்படுத்தாமல் வந்துவிடுவார். சில நேரங்களில் வீடியோ மூலமும் ட்வீட் போட்டும் இரங்கல் தெரிவித்து விடுவார். ஆனால், இந்த முறை இதுவரை ஏன் அவர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பாரதிராஜா மீது கோபமா?: பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற காவிரி போராட்டத்தில் காவலர்கள் தாக்கப்பட்ட நிலையில், காவலர்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசிய நிலையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவோ காவிரி போராட்டத்துக்கு ஆதரவாகவோ வாய் திறக்காத ரஜினிகாந்த் காவலர்களுக்கு ஒன்று என்றால் மட்டும் வாய் திறக்கிறாரா என கடுமையாக பேசினார். ஆனால், அதன் பின்னர், நடைபெற்ற சில விழாக்களில் கூட இருவரும் சகஜமாக பேசிக் கொண்டனர். அந்த கோபம் தான் காரணமா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ட்வீட் கூட போடலையே?: நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் எப்படி இருக்கிறது என்றும் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறாரா? அவருக்கு மனோஜ் பாரதிராஜா உயிரிழந்த செய்தி சென்று சேர்ந்ததா என்றும் ரசிகர்கள் பல விதமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ரஜினிகாந்த் ஒரு இரங்கல் ட்வீட் கூட போடவில்லையே என்றும் வயதான நடிகர்களான கவுண்டமணி, சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

FAQs
ரஜினிகாந்தின் எந்த படத்துக்கு மனோஜ் பாரதிராஜா டூப் போட்டுள்ளார்?

ரஜினிகாந்தின் எந்திரன் படத்தில் ரஜினிக்காக மனோஜ் பாரதிராஜா டூப் போட்டுள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநராகவும் அவர் அந்த படத்தில் பணியாற்றினார்.

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X