மணி சார் இது சரியா? ஆதித்த கரிகாலன், அருள்மொழி, வந்தியத்தேவன்.. ஒரே சீன்லயா? ரசிகர்கள் கேள்வி!

சென்னை: இன்னும் 3 நாட்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பார்வைக்கு வந்து விடும் என்கிற புதிய புரமோவை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தற்போது வெளியிட்டுள்ளனர்.

3 நாட்கள், 3 ஹீரோக்கள் என கேப்ஷன் கொடுத்து வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் புதிய புரமோஷன் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் இப்படியொரு காட்சி இருக்கா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை வசூல் வேட்டை

வெள்ளிக்கிழமை வசூல் வேட்டை

வரும் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 30ம் தேதி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த பொன்னியின் செல்வன் படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக காத்திருக்கிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

3 நாட்கள்

3 நாட்கள்

பொன்னியின் செல்வன் படத்திற்கு தேவையான புரமோஷனல் டூர்களை படக்குழு முடித்து விட்ட நிலையில், இன்னும் 3 நாட்களில் பொன்னியின் செல்வன் வெளியாக போகிறது என்கிற புரமோஷன் வீடியோவை தற்போது லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளது. அந்த புரமோஷனல் வீடியோவில் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கிடைத்துள்ளது.

மூவரும் ஒரே ஃபிரேமில்

மூவரும் ஒரே ஃபிரேமில்

ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன் மூவரும் ஒரே ஃபிரேமில் குதிரையை ஓட்டிக் கொண்டு வருவது போன்ற புதிய புரமோவை வெளியிட்டு படத்திற்கான ஹைப்பை கூட்டி உள்ளனர். அதே சமயம், பொன்னியின் செல்வன் கதையை படடித்த ரசிகர்கள் இந்த காட்சியை பார்த்து விட்டு ரொம்பவே குழம்பிப் போயுள்ளனர்.

எப்படி சாத்தியம்

எப்படி சாத்தியம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகாலன் - வந்தியத்தேவன் சந்திப்பு இருக்கும். அதே போல பொன்னியின் செல்வன் - வந்தியத்தேவன் சந்திப்பும் இருக்கும். ஆனால், ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மன் சந்திப்பு இருக்காது. இந்நிலையில், இதில் எப்படி மூவரும் ஒன்றாக குதிரையில் வரும் காட்சி இடம்பெற்றிருக்கிறது என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

புரமோவுக்காகவா

புரமோவுக்காகவா

உண்மையிலேயே இந்த காட்சி படத்தில் இருக்குமா? அல்லது புரமோவுக்காக இப்படியொரு சீனை இயக்குநர் மணிரத்னம் இயக்கி உள்ளாரா? என ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதற்கு சரியான விடை வரும் வெள்ளிக்கிழமை தியேட்டரில் தெரிந்து விடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புனைவு நாவல் தனேன்னு

புனைவு நாவல் தனேன்னு

ராஜ ராஜ சோழன் முடி சூடுவதற்கு முந்தைய கதையாக உருவான பொன்னியின் செல்வனே புனைவு நாவல் தான். வரலாறு பிளஸ் கற்பனை கலந்த கதை என்பதால், இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை தனக்கு ஏற்றவாறு கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கவும் வாய்ப்பு இருக்கு என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராட்சச மாமனே படத்தில் வானதி கிருஷ்ணர் வேஷம் போட்டு ஆடுவதை போல இங்கேயும் சில விதி விலக்குகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதங்கள் கிளம்பும்

விவாதங்கள் கிளம்பும்

ஆதித்த கரிகாலன் நெற்றியில் திருநீறும் குங்குமமும் இருந்ததில் தொடங்கி ஏகப்பட்ட கேள்விகளை பொன்னியின் செல்வ்ன் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். படம் வெளியான பிறகு பொன்னியின் செல்வன் கதையில் இருந்து இயக்குநர் மணிரத்னம் எத்தனை மாற்றங்களை வைத்துள்ளார். ஏன்? நல்லா இருக்கா? இல்லையா என ஏகப்பட்ட விவாதங்களும் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X