அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் எப்படி இருக்கு...ரசிகர்கள் என்ன சொல்றாங்க ?

சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஏராளமானோர் நடித்துள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என சன் பிக்சர்ஸ் பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது. இதனால் அண்ணாத்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரிலீஸிற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மோஷன் போஸ்டர்

மோஷன் போஸ்டர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ம் தேதி காலை அண்ணாத்த ஃபஸ்ட்லுக் போஸ்டரும், மாலையில் அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இது ரஜினி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கிராமத்து கெட்அப்பில் செம மாஸாக பைக்கில், கையில் நீண்ட அரிவாளுடன் வரும் ரஜினி, பின்னணியில் அதிரடி கிளப்பும் இமானின் இசை ஆகியன இந்த மோஷன் போஸ்டரை வேற லெவல் ஹிட் ஆக்கியது. இதனால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

ஃபஸ்ட் சிங்கிள்

ஃபஸ்ட் சிங்கிள்

இந்நிலையில் நேற்று அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான அண்ணாத்த பாடல் வெளியிடப்பட்டது. செம மாஸ், எனர்ஜினிடிக்கான இந்த பாடலை மறைந்த பின்னனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இது தான் அவர் பாடிய கடைசி பாடல். ஃபஸ்ட்சிங்கிள் வெளியீட்டை முன்னிட்டு எஸ்பிபி பற்றி மிக உருக்கமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார் ரஜினி.

தள்ளி வைத்த சன் பிக்சர்ஸ்

தள்ளி வைத்த சன் பிக்சர்ஸ்

சமீபத்தில் எஸ்பிபி.,யின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அன்று எஸ்பிபி.,க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அண்ணாத்த ஃபஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது கொண்டாட்டமான, துள்ளல் இசை பாடல் என்பதால், அவரின் நினைவு நாளில் கொண்டாட்டங்கள் வேண்டாம் என நினைத்து, ஃபஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தது சன் பிக்சர்ஸ்.

எஸ்பிபி குரலில் இன்ட்ரோ பாடல்

எஸ்பிபி குரலில் இன்ட்ரோ பாடல்

நேற்று வெளியிடப்பட்ட அண்ணாத்த...அண்ணாத்த...அதிரடி சரவெடி என்ற பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது. எஸ்பிபி.,யின் கனீர் குரலில், பாசிடிவ்வான வார்த்தைகள், ரஜினியின் கேரக்டரை குறிக்கும் வரிகள், தெறிக்க விடும் இசையில் அமைந்ததால் இதனை ரஜினி ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். அண்ணாத்த படத்தில் ரஜினி இன்ட்ரோ சாங்கும் இது தான். இந்த ஃபஸ்ட் சிங்கிளை அதிகம் பகிர்ந்து நெட்டிசன்களும் பாராட்டி வருகின்றனர்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

சூப்பர் தலைவா, செம மாஸ் பாடல், பாட்டு செம எனர்ஜி. எஸ்பிபி குரல் மேஜிக். பிளாக் பஸ்டர் பாட்டு. அதிரடி சரவெடி என குறிப்பிட்டுள்ளனர். விஜய், அஜித் ரசிகர்கள் கூட அண்ணாத்த படம் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாட்டு நெஞ்சை தொட்டு சென்றதாகவும். காற்றில் எங்கும் ஒலிப்பதாகவும். இப்படி ஒரு செம எனர்ஜிடிக் பாட்டை கொடுத்ததற்கு அண்ணாத்த படக்குழுவிற்கும், எஸ்பிபி சாருக்கும் நன்றி என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

தலைவர் - எஸ்பிபி காம்போ

தலைவர் - எஸ்பிபி காம்போ

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து மோடில், ரிபீட் மோடில் பாடலை கேட்க வைத்துள்ளீர்கள் என பலர் பாராட்டினாலும், எஸ்பிபி போன்ற சிறந்த பெரிய பாடகரை இசையமைப்பாளர் இமானுக்கு சரியாக பயன்படுத்த தெரியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். அதே சமயம், தலைவர் - எஸ்பிபி காம்போ சூப்பர். தலைவர் ஆட்டம் ஆரம்பம் என்றும் சிலர் பாராட்டி உள்ளனர். கடைசியாக ஒரு முறை தலைவர் - எஸ்பிபி காம்போ வெற்றி பெற்றுள்ளது என்றும் சிலர் உருக்கமாக கமெண்ட் செய்துள்ளனர்.

மிஸ் யூ எஸ்பிபி சார்

மிஸ் யூ எஸ்பிபி சார்

இன்னும் சிலர், முதல் முறை கேட்கும் போது புரியல. முதல் முறை கேட்கும் போது பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டால் புரியும் போல என்றும் கமெண்ட் செய்துள்ளனர். எஸ்பிபி.,யின் குரலை பாராட்டியும், மிஸ் யூ எஸ்பிபி சார் என்றும் அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்ணாத்த நடந்தா ரேஸ்

அண்ணாத்த நடந்தா ரேஸ்

அண்ணாத்த பேசுனா ஸ்டைலு...அண்ணாத்த பாடுனா ஸ்டைலு ... அண்ணாத்த ஆடுனாாாாாாா...கொண்டாட்டம் கொண்டாட்டம் தா என்ற வரிகள் பெரும்பாலானவர்களின் மனம் கவர்ந்த வரியாக உள்ளதாகவும், அண்ணாத்த நடந்தா ரேஸ் என்ற வரி ரஜினியின் மாஸுக்கு ப்ளஸாக இருப்பதாக பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X