ஜன நாயகன், பராசக்தி 2 படங்களையும் தாராளமாக பார்க்கலாம்.. பொங்கல் பரிசுத்தொகை.. ரசிகர்கள் பிளான்!

சென்னை: பொதுவாக ஒரே நேரத்தில் பெரிய படங்கள் வெளியானால் உண்மையாக கஷ்டப்படப்போவதே மக்கள் தான். தியேட்டருக்கு ஒரு நபருக்கு குறைந்தபட்ச டிக்கெட் விலை 200 ரூபாய், பைக் பார்க்கிங் 50 ரூபாய், பாப்கார்ன், கூல்ட்ரிங்ஸ் ஸ்நாக் செலவு 300 பிளஸ் ஆக மாறியுள்ள சூழலில் ஒரு குடும்பம் ஒரு படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்க குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை செலவாகும்.

இந்நிலையில், ஒரு பக்கம் பெண்களை புலியாக மாத்தப் போற ஜன நாயகன் படம் விஜய்யின் கடைசி படமாக வெளியாக போகிறது. இன்னொரு பக்கம் இந்தி திணிப்பை எதிர்த்து செந்தமிழை காக்க போராடிய மாணவர்கள் பற்றிய பராசக்தி படமும் வெளியாகிறது.

Fans ready to watch both Jana Nayagan and Parasakhi with Pongal Cash Prize Amount

தமிழ் சினிமாவின் என்டர்டெயின்மென்ட் நாயகர்களான விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இந்த பொங்கலுக்கு அண்ணன் தம்பியாக படங்களை ரிலீஸ் செய்யவுள்ள நிலையில், ரசிகர்கள் எப்படி 2 படங்களையும் பார்க்க முடியும் என்கிற கேள்விக்கு பதிலாக திமுக அரசு இந்த பொங்கலுக்கு 3000 ரூபாய் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்கப் போவதை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

2 படமும் பார்க்கலாம்: விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி உள்ளிட்ட 2 படங்களையும் ரசிகர்கள் தாராளமாக குடும்பத்துடன் பார்க்கலாம். அதான் அரசு குடும்பத்துக்கு 3000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை கொடுக்கப் போகிறதே என விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

டாஸ்மாக் ஒரு பக்கம்: பொதுவாக அரசு ஒரு பக்கம் பணத்தை கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் டாஸ்மாக் மூலம் பொங்கல் கலெக்‌ஷனை வசூல் செய்து விடுகிறது என்றுதான் அதிகபட்சமாக மீம்ஸ் குவியும். ஆனால், இந்த முறை ஜன நாயகன், பராசக்தி படங்கள் வெளியாக உள்ள நிலையில், மக்கள் தியேட்டரில் தான் இந்த முறை செலவு செய்வார்கள் என்றும் குடிமகன்கள் கண்டிப்பாக டாஸ்மாக்கில் பெரிய பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டையும் வழக்கம் போல வைப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X