ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி.. வைரலாகும் புகைப்படம்.. இருவரையும் மறக்க முடியாமல் தவிக்கும் நெஞ்சங்கள்!

சென்னை: சினிமா மற்றும் அரசியல் உலகை கலக்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதே போல இந்திய சினிமாவையே கலக்கிய நடிகை ஸ்ரீதேவியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளும் இன்று தான்.

இருவரையும் ஒன்றாக நினைக்கும் வண்ணமாக ஜெயலலிதா மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்

ஜெயலலிதா பிறந்தநாள்

1948ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி பிறந்தவர் ஜெயலலிதா. 1961ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 140 படங்களில் நடித்து சினிமா உலகை ஆட்சி செய்த ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தி 6 முறை தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சி செய்தவர். கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் அரங்கேறி வருகின்றன.

ஸ்ரீதேவி நினைவுநாள்

ஸ்ரீதேவி நினைவுநாள்

மீனாம்பட்டியில் பிறந்து கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனது நடிப்பால் கலக்கிய நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ம் தேதி பிப்ரவரி 24ம் தேதி துபாய் ஹோட்டலில் விபத்து காரணமாக உயிர் துறந்தார். ஸ்ரீதேவி மறைந்து 3 ஆண்டுகள் ஆனதையும் சினிமா ரசிகர்கள் நினைத்து உருகி வருகின்றனர்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

#Sridevi மற்றும் #Jayalalitha என்கிற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி இருவரையும் மக்கள் நினைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, நடிகை ஸ்ரீதேவி மற்றும் ஜெயலலிதா இருவரையும் சேர்ந்து நினைக்கும் விதமாக ஒரு புகைப்படத்தையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

ஜெ மடியில் ஸ்ரீதேவி

ஜெ மடியில் ஸ்ரீதேவி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்து வந்த காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரீதேவி. ஆதிபராசக்தி படத்தில் பார்வதி அம்மனாக ஜெயலலிதா நடித்த நிலையில், அவரது மடியில் முருக கடவுளாக நடித்த ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருவரும் இன்று நம்முடன் இல்லையே என ஏகப்பட்ட ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X