Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமல்ஹாசனை வம்பிழுக்க நினைக்கும் வெற்றிமாறன்... பதிலடி தரும் கமல் ரசிகர்கள்.
சென்னை : கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்க போகும் வாடிவாசல் படத்திற்கு டெஸ்ட் ஷூட் செய்து முடித்தார், அந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன்.
அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விடுதலை எனும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கும் அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் முடிக்கும் தருவாயில் இருக்க வாடிவாசல் படத்திற்கு தயாராகி வருகிறார் வெற்றிமாறன்.
இதற்கிடையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் கமல் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
'கே
ஜி
எஃப்
2’
டிரைலர்
நாளை
ரிலீஸ்...சோஷியல்
மீடியா
அதிர
போகுது

நடிகர்களின் கனவு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் பல வெற்றி படங்களை தந்தவர். நடிகர் தனுஷ் வியாபார ரீதியாக பெரும் ஹீரோவாக மாற காரணமாக அமைந்தவர். ஒவ்வொரு படத்திலும் தன் முத்திரை பதித்தவர். ஒவ்வொரு நடிகரின் கனவு இயக்குனராக இருந்து வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் RRR படத்தின் பிரமோஷனில் வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் எனும் விருப்பத்தை ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஒருசேர வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

திறமையின் ‘ மையம் ‘ வெற்றிமாறன்
வெற்றிமாறனின் திரைமொழிகென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஒரே பாணியில் இல்லாமல் தனது ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு பாணியில் எடுத்துக்காட்டுவது அவர் தனக்கே வைத்துக் கொண்ட அளவுகோலாக உள்ளது. வாடிவாசல் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் வெற்றிமாறன். அதுமட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசன் நடிக்க ஒரு படத்தையும் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு வலம் வருகிறது.

‘ மையம் ‘ என்று எதுவுமில்லை
சமீபத்தில் வெற்றிமாறன் அளித்த ஒரு பேட்டியில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது " நீங்கள் இடதுசாரியா அல்லது வலதுசாரியா யார் என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். ' மையம் ' என்று எதுவுமில்லை. ' மையம்' என்று சொன்னால் நீங்கள் வலதுசாரியே " என பதிலளித்துள்ளார். வெற்றிமாறனின் இந்த பதில் பல விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சித் தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வெற்றிமாறனுக்கு காட்டமாக பதில் அளித்து வருகிறார்கள்.

" மையம் " இல்லை என்றால் " மையம் " என்ற சொல் எப்படி வந்தது
' மையம் ' என்று ஒன்று இல்லை என வெற்றிமாறன் சொல்ல அதற்கு பதில் கேள்விகள் மற்றும் விளக்கங்களை கமல் ரசிகர்கள் தர ஆரம்பித்திருக்கிறார்கள். திருக்குறளில் ' மையம் ' சார்ந்து சில பகுதியே திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் அவர் ஏன் அப்படி எழுத வேண்டுமென சில ரசிகர்கள் கேட்க, நீதிமன்றத்தில் இடது வலது புறங்களில் நீதி கேட்டு நிற்பவர்கள் இருக்க மத்தியில் இருக்கும் நீதிபதி நிலை என்ன? அது ' மையம் ' தானே என சிலர் கேட்க, 'மையம் ' என்று ஒன்று இல்லை என்றால் ' மையம் ' என்ற சொல் தமிழ் அகராதியில் எப்படி வந்தது போன்ற பல கேள்விகளை கமல் ரசிகர்கள் கேட்டு வெற்றிமாறன் ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்து வருகின்றனர். வெற்றிமாறன் யாரையோ திருப்திபடுத்த இப்படிப் பேசி இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.