ரவியிடமிருந்து விலகிவிடுங்கள்.. கெனிஷாவை சுத்துப்போடும் ரசிகர்கள்.. அவரது ரியாக்ஷன் என்ன?
சென்னை: தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ரவி மோகன் வந்ததுதான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள், திரைத்துறையில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. விவாகரத்து வாங்குவதற்கு முன்னரே அவர் எப்படி வரலாம் என்று ஒருதரப்பினரும், விவாகரத்து முடிவில் ரவி உறுதியாக இருக்கும்போது தனக்கு பிடித்த இன்னொரு பெண்ணுடன் வருவதில் என்ன தவறு என்று மறுதரப்பினரும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரவி மோகன் அவரை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். தான் ஏன் இந்த முடிவு எடுத்தேன் என்பது குறித்து அந்த சமயத்தில் அளித்த பேட்டிகளில் பேசியிருந்த ரவி, 'வீட்டில் வேலைக்காரர்களுக்கு கிடைக்கும் மரியாதைகூட தனக்கு கிடைக்கவில்லை. வீட்டை விட்டு வெளியேறியபோது தன்னிடம் கார்கூட இல்லை' என்று காரணங்களை அடுக்கினார். எனவே இதற்கெல்லாம் ஆர்த்தியும் அவரது தாய் சுஜாதாவும்தான் காரணம் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
ஆர்த்தியின் விளக்கம்: ஆனால் ஆர்த்தி அளித்த விளக்கத்திலோ, 'தன்னிடம் எதுவும் கேட்கப்படாமலேயே இந்த முடிவை ரவி எடுத்திருக்கிறார். எனக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது. அவரிடம் பேசுவதற்கு எவ்வளவோ முறை முயன்றேன். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை' என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து சட்டப்பூர்வமாக விவாகரத்து வேண்டுமென்று கூறி நீதிமன்றத்துக்கு சென்றார் ரவி மோகன். இப்போது அவர்களது விவாகரத்து வழக்கு நடந்துவருகிறது.

கெனிஷாவுடன் ஜோடி: இதற்கிடையே கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசியதற்கு காட்டமான ரியாக்ஷனும் கொடுத்திருந்தார் ரவி. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு பாடகி கெனிஷாவுடன் ஜோடியாக வந்தார். திருமணம், ரிசப்ஷன் என இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக வந்தார்கள். அதேபோல் மாலத்தீவுக்கும் அவர்கள் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆர்த்தியோ எமோஷனலாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
நடிகைகள் ஆதரவு: அந்த அறிக்கையில், 'குழந்தைகளுக்காக ஒரு தாயாக மட்டுமே இப்போது குரல் எழுப்புகிறேன். நீதிமன்றம் முடிவு செய்யும்வரை நான் ஆர்த்தி ரவிதான். எனவே யாரும் என்னை இப்போதைக்கு ரவியின் முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்' என தெரிவித்திருந்தார். அவரது அந்த அறிக்கையை பார்த்த நடிகைகள் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் ஆர்த்திக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு ஆதரவு பெருக ஆரம்பித்திருக்கிறது. அதேசமயம் கெனிஷாவோ தான் சோல் மேட்டை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவருகிறார்.
அன்னையர் தினத்திலும் உருக்கம்: ஆர்த்தியோ உருக்கமாக இன்னொரு போஸ்ட்டை அன்னையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களும் உண்மையில் ஆர்த்தி பாவம்தான் என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் கெனிஷா தனக்கு என்ன நிறத்திலான உடை அணிந்தால் பொருத்தமாக இருக்கும் என்ற கேள்வியை இன்ஸ்டாகிராமில் எழுப்பியிருந்தார்.

சுத்துப்போட்ட ரசிகர்கள்: அதில் கமெண்ட்ஸ் செக்ஷனுக்கு சென்ற ரசிகர்களில் பலர், 'தயவு செய்து ரவியிடமிருந்து ஒதுங்கிவிடுங்கள். அவர் தமிழ் சினிமாவில் ஹோம்லியான ஹீரோ. இப்போது எல்லோரும் அவரை ட்ரோல் செய்கிறார்கள்' என கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் ரசிகர்களில் சிலரோ, 'இது உங்கள் வாழ்க்கை. எப்படி, யாரோடு வாழ வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ரவியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்' என்றும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட்டுகளை கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்திருக்கிறார்.
ஒருபக்கம் ஆர்த்தியின் உருக்கமான அறிக்கைகள், போஸ்ட்டுகள் இருக்க; மறுபக்கம் கெனிஷாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ரசிகர்கள் களமாட தொடங்கியிருக்கிறார்கள். எனவே இதற்கெல்லாம் கெனிஷாவின் அடுத்தக்கட்ட ரியாக்ஷன் என்ன மாதிரியாக இருக்கும் என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











