twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடுத்த ராமானந்த்.. ராமாயணத்தை இயக்குங்கள்.. ராஜமவுலிக்கு ரசிகர்கள் கோரிக்கை #RajamouliMakeRamayan

    |

    சென்னை: ராமானந்த் சாகர் உருவாக்கிய ராமாயணம் சீரியல் தூர்தர்ஷனில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் உலக சாதனை படைத்திருக்கிறது.

    இந்நிலையில், அடுத்த ராமானந்த் சாகர் ராஜமவுலி தான் என்றும், ராமாயணம் எனும் மகா காவியத்தை அவரால் தான் திறம்பட இயக்க முடியும் எனவும் #RajamouliMakeRamayan என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    பாகுபலி படத்தை இயக்கி உலகையே திரும்பி பார்க்க வைத்த ராஜமவுலி ராமாயணத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    விஜய்யின் அடுத்த படம்..அந்த சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகம்தான்.. சிக்னல் கொடுத்த டெக்னீஷியன்!விஜய்யின் அடுத்த படம்..அந்த சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகம்தான்.. சிக்னல் கொடுத்த டெக்னீஷியன்!

    இரத்தம் ரணம் ரெளத்திரம்

    இரத்தம் ரணம் ரெளத்திரம்

    பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் இரத்தம் ரணம் ரெளத்திரம் படம் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் என பிரம்மாண்டமாக அந்த படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார்.

    டிரெண்டிங்

    டிரெண்டிங்

    இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிறகு ராமாயணம் கதையை படமாக இயக்குநர் ராஜமவுலி இயக்க வேண்டும் என இந்தியளவில் ரசிகர்கள் #RajamouliMakeRamayan என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். சரித்திர படங்களை சரியாக கையாளும் திறமை இந்தியாவில் ராஜமவுலிக்கே இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    அடுத்த கட்டம்

    அடுத்த கட்டம்

    வால்மிகி எழுதிய ராமாயணத்தை துளசி தாசர் நாடு முழுவதும் பரப்பினார். தொலைக்காட்சியில் அந்த உன்னத காவியத்தை ராமானந்த் சாகர் ஒளிபரப்பி மக்கள் மத்தியில் ராமர் குறித்தும், சீதை குறித்தும், அனுமன் பற்றியும் விளக்கினார். ராமாயணத்தின் அடுத்த பரிணாமத்தை இயக்குநர் ராஜமவுலியால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

    அடுத்த ராமானந்த் சாகர்

    அடுத்த ராமானந்த் சாகர்

    ராமானந்த் சாகர் உருவாக்கிய ராமாயணம் டிவி சிரீயல் 90களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த லாக் டவுன் நேரத்தில், அதனை தூர்தர்ஷன் மறு ஒளிபரப்பு செய்திருந்தது. நடிகை காஜல் அகர்வால் முதல் பல பிரபலங்களும் ராமாயணத்திற்காக காத்துக் கிடப்பதாக கூறினர். இந்நிலையில், அடுத்த ராமானந்த் சாகர் ராஜமவுலி தான் என ரசிகர்கள் முத்திரை குத்தி வருகின்றனர்.

    ராமராக

    ராமராக

    அப்படி ராமாயணம் படத்தை ராஜமவுலி இயக்குவது உறுதியானால், ராமராக யாரை நடிக்க வைக்கலாம் என்ற போட்டியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரபாஸ் ரசிகர்கள், ராமராக பிரபாஸ் தான் தகுதியான தேர்வு என்றும், மகேஷ் பாபு ரசிகர்கள் ராமராக மகேஷ்பாபுவையும், அனுமனாக பிரபாஸையும் போட்டு எடுத்தால் வேற லெவல்ல இருக்கும் எனக் கூறி வருகின்றனர்.

    ஹாலிவுட் சீரியல்களுக்கு ஆப்பு

    ஹாலிவுட் சீரியல்களுக்கு ஆப்பு

    கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஹெச்.பி.ஒவில் 17.4 மில்லியன் ரசிகர்களால் ரசிக்கப்பட்டதாகவும், பிக் பேங் தியரி 18 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டதாகவும் ஆனால், மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணம் தொடர் 77 மில்லியன் பார்வைகளை கடந்து உலக சாதனை செய்துள்ளது. ராமரின் ரியல் பவர் என்றும் மீம்ஸ்கள் பறக்கின்றன.

    அயோத்தி எப்படி இருக்கும்

    அயோத்தி எப்படி இருக்கும்

    ராஜமவுலியின் பாகுபலி படத்தில் மகிழ்மதி ராஜ்ஜியமே இப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் இயக்குநர் ராஜமவுலி ராமாயணம் படத்தை உருவாக்கினார் என்றால், அந்த அயோத்தி மாநகரம் எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஒவ்வொரு காட்சியையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் கற்பனை செய்து பார்த்து வருகின்றனர்.

    உலகமே வியக்கணும்

    உலகமே வியக்கணும்

    உலகமே வியக்கும் அளவுக்கு ராமாயணத்தின் வீரியம் குறையாமல் ஒரு உன்னத படைப்பை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் ராஜமவுலி என டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி ரசிகர்களும் தங்கள் கோரிக்கையை முன் வைத்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த கோரிக்கையை ராஜமவுலி ஏற்பாரா? பட்ஜெட் எவ்வளவு இருக்கும் என்ற கேள்விகள் பிரமிப்பை கொடுக்கிறது.

    English summary
    'Ramayan' and 'Uttar Ramayan' re-runs have ended and now fans have a new demand-- a contemporary remake of the mythological show by director SS Rajamouli.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X