ஜோடி சூப்பர், தயவு செய்து லவ் பண்ணுங்க: சாக்லேட் பாய், வாரிசு நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்

By Siva

Recommended Video

ரன்பிர் கபூருக்கும், ஆலியா பட்டுக்கும் காதல்!

மும்பை: பார்க்க ஜோடி சூப்பராக இருக்கிறீர்கள், தயவு செய்து காதல் செய்யுங்கள் என்று ரசிகர்கள் ரன்பிர் கபூர், ஆலியாவிடம் கேட்டுள்ளனர்.

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஆலியா பட் நடித்து வரும் இந்தி படம் பிரம்மாஸ்திரா. கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தில் நாகினி தொலைக்காட்சி தொடர் புகழ் மவுனி ராயும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரன்பிர் கபூரும், ஆலியா பட்டும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஆலியா

ஆலியா

தன் பெயர் ஆலியாவுடன் சேர்ந்து அடிபடுவதால் ரன்பிர் கபூர் கடுப்பில் உள்ளாராம். எவன் பார்க்குற வேலை என்றே தெரியவில்லையே என்று குமுகிறாராம். ஆலியாவோ யார் கிசுகிசுத்தால் என்ன என்று கூலாக உள்ளாராம்.

விளம்பரம்

விளம்பரம்

ஆலியாவும், ரன்பிரும் காதலிப்பதாக கூறப்படுவது பிரம்மாஸ்திரா படத்தின் விளம்பரத்திற்காக தான் என்றும் ஒரு பேச்சு உள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றுவதால் அவர்கள் காதலிப்பதாகவே பலர் நம்புகிறார்கள்.

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

சோனம் கபூரின் திருமண வரவேற்புக்கு ரன்பிர் தனது பெற்றோருடன் அல்லாமல் ஆலியாவுடன் ஜோடியாக வந்தார் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அவர்கள் ஜோடியாக வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

காதல் செய்க

காதல் செய்க

ஆலியா, ரன்பிர் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இம்பிரஸ் ஆகிவிட்டனர். ஜோடியாக பார்க்க ரொம்ப அழகாக இருக்கிறது. தயவு செய்து நிஜத்தில் காதல் செய்யுங்கள் என்று ரசிகர்கள் கெஞ்சுகிறார்கள்.

கோரிக்கை

கோரிக்கை

ரன்பிர் தயவு செய்து ஆலியாவை காதல் செய்யவும். அவர் உங்களுக்கு ஏற்ற ஜோடி என்று ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். ரன்பிர் கபூரின் அம்மா நீத்துவுக்கும் ஆலியாவை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X