“மாஸ்டர்“ டிரைலரையாவது விடுங்கப்பா.. ரசிகர்கள் ஏக்கம்.. ட்விட்டரில் ஹாஸ்டேக் !
சென்னை : மாஸ்டர் படத்தின் டிரைலரை வெளியிடுங்கள் என்று தயாரிப்பாளருக்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கடந்த மாதம் 15 நாள் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் 22ம் தேதியும் மாஸ்டர் படம் ஏப்ரல் 9 அதாவது இன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மார்ச் 17க்கு பின்பே நிலைமை தலைகீழாக மாறியது அதன்பின் மார்ச் 25ல் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாவது தள்ளி போகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியது.

மாஸ்டர் படம் இன்று வெளியாக வேண்டி இருந்ததால் சமூக வலைத்தளங்கள் முழுக்க மாஸ்டர் படத்தின் வெளியீட்டை பற்றியே அனைத்து ரசிகர்களும் பேசி வருகின்றனர். இதனால் ட்விட்டரில் 'மாஸ்டர் பஃர்ஸ்ட் டே பஃர்ஸ்ட் ஷோ' என்ற ஹாஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

சில ரசிகர்கள் நாம் இந்நேரம் முதல் காட்சி பார்த்து முடித்து விட்டு விஜயின் நடிப்பு பற்றியும் படத்தின் காட்சியையும் நினைத்தும் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருப்போம் என்று கூறியுள்ளனர். மேலும் முதல் நாள் காட்சிகளில் நடக்க கூடிய கொண்டாட்டங்கள் பற்றியும், திரையரங்கே திருவிழாவாக மாறி இருக்கும் என்று தங்கள் ஏக்கங்களை விஜய் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.'
இது இப்படி இருக்க மறுபுறம் மீம் கிரியேட்டர்களும் தங்கள் பங்கிற்கு தங்களால் முடிந்த மாஸ்டர் பட ரீலிஸ் மீம்களை போட்டு தள்ளி வருகின்றனர். எப்போதும் போல இந்நேரம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சண்டை போட்டுக்கொள்வது எவ்வளவு கலகலவென்று நல்ல இருக்கும். இந்த கொரோனாவாலா இணையமே இப்படி வெறுச்சோடி போச்சே என்று மீம்களின் வாயிலாக நக்கல் செய்து வருகின்றனர்.

மேலும், விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் பட தயாரிப்பாளருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். படத்தைத்தான் இப்போது வெளியிட முடியாது, குறைந்த பட்சம் டிரைலரையாவது வெளியிடுங்களே என்று சமூகவலைத்தளம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளனர்.

ரசிகர்களின் இந்த வேண்டுகொள் நிறைவேறுமா, மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளிவருமா என்பது தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்ப்போம் நிச்சயம் ரசிகர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றே நாமும் நம்புவோம்.


Click it and Unblock the Notifications











